world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. ரஷ்ய ராணுவ அமைச்சரும் துருக்கி ராணுவ அமைச்சரும் உக்ரைன்/சிரியா போர் மற்றும் உக்ரைன் துறைமுகங்களிலிருந்து உணவு தானியங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது குறித்து தொலைபேசியில் விவாதித்தனர்.
  2. ரஷ்ய கப்பல்களின் மூலம் தனது நாட்டின் உணவு தானியங்களை கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
  3. போலந்து 630 மில்லியன் டாலர் பெறுமான ஆயுதங்களை உக்ரைனுக்கு தர முன்வந்துள்ளது. ஆனால் எண்ணெய் கிடைக்காமல் தனது மக்களை விறகுகள் மூலம் சமைக்கச் சொல்கிறது.  
  4. யூரோ கிளியர் எனப்படும் ஒரு நிதிநிறுவனம் தாங்கள் ரஷ்யாவின் 27 பில்லியன் டாலர்களை முடக்கி வைத்துள்ளோம் என அறிவித்துள்ளது.
  5. செர்பியாவுக்கு ரஷ்ய அமைச்சர் லாவ்ரவ் விமானத்தில் செல்ல திட்டமிட்டார். ஆனால் பல ஐரோப்பிய நாடுகள் தமது வான் எல்லை மூலம் செல்ல தடைவிதித்த காரணத்தால் பயணம் கைவிடப்பட்டது.  
  6. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சரும் சபாநாயகரும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
  7. பிரபல கணினி நிறுவனமான ஐ.பி.எம். ரஷ்யாவில் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
  8.  ஜப்பானுக்கு பதிலடியாக ரஷ்யா அந்த நாட்டுடன் உள்ள அனைத்து கடல்வழி ஒப்பந்தங்களையும் ரத்து செய்துவிட்டது.
  9. ரஷ்ய தடைகள் காரணமாக ஆஸ்திரேலியாவில் திடீரென எரிசக்தி விலை 10000%உயர்ந்து பின்னர் குறைந்தது.
  10. ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் படுகுழியை நோக்கிச் செல்கிறது எனும் அச்சம் எழுந்துள்ளது. உக்ரைனுடனான சமாதான பேச்சு வார்த்தை குறித்து துருக்கியுடன் நேரில் பேச லாவ்ரவ் திட்டமிட்டுள்ளார்.