world

img

ரஷ்யா: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோமி குடியரசின் வோர்குடாவில் இருந்து நோவோரோசிஸ்ட் வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில், இண்டா நகரம் அருகே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6.12 மணியளவில் தடம் புரண்டுள்ளது.

மொத்தம் 14 பெட்டிகளில் 511 பயணிகள் பயணித்த நிலையில், 9 பெட்டி தடம் புரண்டுள்ளது. இதில், 70 பயணிகள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனமழை காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், 2 மீட்பு ரயில்களுடன் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

;