world

img

ரஷ்யா- உக்ரைன் போர்... களத்திலிருந்து

l    அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்எ “SWIFT” னப்படும் வங்கி பரிவர்த்தனைகளில் ரஷ்யாவை தடை செய்துள்ளன. இதனை முறியடிக்கும் வகையில் சீனா தனது பரிவர்த்தனை முறை மூலம் ரஷ்யாவுக்கு உதவினால் சீனா மீதும் தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரும் பணியில் இருப்பதாக அமெரிக்க குடியரசு கட்சி செனட் சபை உறுப்பினர் மார்கோ ருபியோ தெரிவித்துள்ளார்.

l    அப்பாவி மக்கள் வெளியேற ரஷ்யா போர் நிறுத்தம் மூன்று முறை அறிவித்தாலும் உக்ரைன் நாஜிக்கள் அதனை சீர்குலைக்கின்றனர் எனவும் உக்ரைனையும் போர் நிறுத்தத்தை மதித்து மக்கள் வெளியேற உதவிட அந்த தேசத்தை வலியுறுத்துமாறு ஐரோப்பிய நாடுகளை புடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

l    உக்ரைன் ராணுவம் தனது டாங்கிகளை மக்கள் வசிக்கும் இடங்கள்/பள்ளிகள்/மழலையர் கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கு  மத்தியில் நிறுத்தியுள்ளது. இதனால் ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்துவதை தடுப்பது; அவ்வாறு தாக்குதல் நடத்தினால் பொது மக்களும் உயிரிழப்பர். அதனை ரஷ்யாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது எனும் அணுகுமுறையை உக்ரைன் ராணுவம் கடைப்பிடிக்கிறது.

l    ரஷ்யாவின் மேஜர் ஜெனரல் விடாலி கெரசிமோவ் போர்க்களத்தில் கார்கிவ் எனும் இடத்தில் கொல்லப்பட்டார். இது ரஷ்யாவுக்கு பெரிய இழப்பு என கருதப்படுகிறது. 

l    உக்ரைன் போர் மற்றும் ரஷ்யா மீது வர்த்தக தடை காரணமாக நிக்கல் உலோகத்தின் விலை 15 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

l    உலகிலேயே அதிக வர்த்தக தடைகள் போடப்பட்ட தேசம் எனும் பெயரை ரஷ்யா பெற்றுள்ளது. ஈரான்/சிரியா/வடகொரியா ஆகிய தேசங்களை ரஷ்யா பின்னுக்கு தள்ளியது. வர்த்தக தடை மேற்கத்திய சக்திகளுக்கு ஒரு ஆயுதமாக மாறியுள்ளது.

l    ரஷ்ய படைகள் வடக்கு வட கிழக்கு பகுதிகளில் பெரிய அளவுக்கு முன்னேறவில்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறுகிறது.  

l    ரஷ்யா 11,000 வீரர்களை இழந்துள்ளது என உக்ரைன் கூறுகிறது. அதற்கு பதிலளித்த ஒரு டுவிட்டர் வாசி அமெரிக்கா ஆப்கனில் 20 ஆண்டுகளில் இழந்ததைவிட 5 மடங்கு ரஷ்யா 2 வாரங்களில் இழந்து  விட்டதா என எதிர்கேள்வி எழுப்பியுள்ளார். உக்ரைன் உண்மை விவரங்களைத் தான் சொல்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

l    ரஷ்யாவை உக்ரைன் படையெடுப்பில் குற்றம்சாட்டும் அமெரிக்காவின் கைகளில் யூகோஸ்லேவியா(1999)/ லிபியா(2011) உக்ரைன்(2022) மற்றும் ஈராக் ஆகிய தேசங்களின் ரத்தம் படிந்துள்ளது என அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

l    உக்ரைனுக்கு சென்று ரஷ்யாவுக்கு எதிராக  போரிட விரும்புபவர்களை ஆள்சேர்க்க “இண்டர் நேஷனல் லெஜியன்” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஸ்பெயினில் பாசிச அரசுக்கு எதிராக போரிட்ட “இண்டர் நேஷனல் பிரிகேடுக்கு” இணையாக ஒப்பிட்டுள்ளார். இது கேலிக்கூத்தானது என பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. ஸ்பெயினுக்கு சென்று போரிட்டவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் எனவும் உக்ரைனில் கம்யூனிஸ்டு கட்சி தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

l    ரஷ்யாவில் பி.பி.சி தடை செய்யப்பட்டுள்ளதை அந்த நிறுவனம் கடுமையாக கண்டித்துள்ளது. ரஷ்ய மக்கள் எது உண்மை என்பதை அறிந்து கொள்வதை தடுக்கும் முயற்சி எனவும் பி.பி.சி அங்கலாய்த்துள்ளது. ஆனால் ரஷ்யாவின் ஆர்.டி. எனும் தொலைக்காட்சி பிரிட்டன் உட்பட ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டபொழுது பி.பி.சி. ஏன் மவுனம் காத்தது என பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

l    1990ஆம் ஆண்டுக்கு பின்னர் மட்டும் பனாமா/ லைபீரியா/ ஈராக்/ சோமாலியா/ யுகோஸ்லேவியா/ ஹைட்டி/ போஸ்னியா/ குரோசியா/ காங்கோ/சூடான்/ஆப்கானிஸ்தான்/மெசபடோனியா ஆகிய தேசங்கள் மீது அமெரிக்கா படையெடுத்துள்ளது. எனவே இப்பொழுது ரஷ்யாவை விமர்சிக்கும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது எனவும் சாத்தான் வேதம் ஓதக்கூடாது எனவும் இண்டர் நேஷனல் மேகசின் எனும் இதழ் விமர்சித்துள்ளது. 

l    உக்ரைனில் தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு இளம் சகோதரர்களை தேசத் துரோகம் எனும் குற்றச்சாட்டில் கைது செய்து தூக்கு தண்டனை விதித்துள்ளது உக்ரைன் அரசாங்கம். இதனை செய்வதில் தீவிரம் காட்டியது உக்ரைன் நாஜிக்கள். 

l    பிரிட்டனின் வெளியுறவு அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு  காரணமாக ஈர்க்கப்பட்ட ஒரு சில பிரிட்டன் குடிமக்கள்  ரஷ்யாவுக்கு எதிராக போரிட ஏற்கெனவே உக்ரைன் சென்றடைந்துள்ளனர். இவர்கள் ரஷ்ய படையினரை அல்லது ஆதரவாளர்களை கொல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் ரஷ்ய படைகள் அவர்களை கைது செய்தால் யார் அவர்களின் விடுதலைக்கு பொறுப்பு? அவர்கள்  கொல்லப்பட்டால் யார் அவர்களது குடும்பங்களுக்கு பதில் சொல்வது?
இதனை கூறிய அமைச்சர் அல்லது அவரது குழந்தைகள் ஏன் உக்ரைனுக்கு செல்லவில்லை?இப்படி பல கேள்விகளை பிரிட்டனில் பலர் எழுப்பியுள்ளனர்.

l    ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் எண்ணத்துக்கு ஏற்ப செயல்படுவதை தவிர்த்து சுதந்திரமாக உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர பாடுபட வேண்டும் எனவும் அடுத்த கட்டமாக ஐரோப்பா
வின் பாதுகாப்புக்கு சுயேச்சையான திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் தொலைபேசியில் அழைத்த பொழுது சீன வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

l    எங்களிடம் என்ன உள்ளது என்பதை முழுமையாக வெளிப்படுத்தவில்லை எனவும் பல நாடுகள் தந்த ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் ரஷ்யாவுக்கு அதிர்ச்சி காத்திருப்பதாகவும் உக்ரைனின் ராணுவ அமைச்சர் பீதியைக் கிளப்பியுள்ளார்.

l    “இண்டர்னேஷனல் லெஜியன்” மூலம் உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கு எதிராக போரிட சென்ற குழுவில் அமெரிக்கா/பிரிட்டன்/சுவீடன்/லிதுவேனியா/மெக்சிகோ/இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உண்டு என உக்ரைன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியர்களும் உண்டு என்பதை கவனிக்கவும்.  

l    இதுவரை உக்ரைன் மீது ரஷ்யா 625 ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதாக அமெரிக்காவின் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் உக்ரைன் எவ்வளவு ஏவுகணைகளை ஏவியது என்பதை கூறவில்லை. 

l    உலகில் உள்ள அனைத்து அமைதிப்படைகளிலும் பணியாற்றும் உக்ரைன் வீரர்களை அவர்களது ஆயுதங்களுடன் உடனடியாக உக்ரைன் வருமாறு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆணையிட்டுள்ளார்.

l    ரஷ்யாவின் ஆளும் கட்சி தமது தேசத்தை ஏமாற்றி ஓடிய அனைத்து தனியார் நிறுவனங்களின் சொத்துக்களையும் தேசியமயமாக்க வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளது. 

l    உக்ரைனின் நாஜிக்களை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆதரித்ததும் அவர்களுக்கு தேசிய விருதுகள் கொடுத்து ராணுவத்தின் துணை அமைப்பாக சேர்த்ததும் தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் வைரலாக சுற்ற ஆரம்பித்துள்ளன. மேற்கத்திய நாடுகளின் மக்களுக்கு இது அதிர்ச்சியான செய்தி.

l    உக்ரைன் பாசிசவாதிகள் தங்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தினர் எனவும் தங்களையும் இந்தியர்கள்/ லத்தீன் அமெரிக்க நாட்டினரையும் கேவலமாக நடத்தினர் எனவும் நாடு திரும்பிய கருப்பின மாணவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

l    அமெரிக்காவின் பேச்சுக்கு செவிசாய்த்து ரஷ்யா மீது தடைகள் விதிக்க முடியாது என ஹங்கேரி பகிரங்கமாக அறிவித்துள்ளது. 

l    உக்ரைனின் போருக்காக கண்ணீர் விடுபவர்கள் பிரிட்டன்/அமெரிக்கா உதவியுடன் சவூதிஅரேபியா நடத்தும் ஏமன் போரில் 3,77,000 பேர் கொல்லப்பட்டது; இவர்களில் 70சதவீதம் குழந்தைகள்; 40 லட்சம் பேர் புலம் பெயர்வு;1.45 கோடி பேருக்கு உணவு பற்றாக்குறை; 2 கோடி பேர் உதவியின்றி திணறல் - ஆகிய கொடுமைகளை ஏன் கண்டிக்கவில்லை என பலரும் சமூக ஊடகங்களில் கேட்கின்றனர். 

l    பிரான்சின் புகழ் பெற்ற மிச்சலின் உட்பட பல தொழிற்சாலைகள் உதிரிபாகங்கள் ரஷ்யாவிலிருந்து கிடைக்காததால் மூடப்பட்டு வருகின்றன. 

l    ரஷ்யாவின் எரிசக்தி தமது தேசத்துக்கு அவசியம் தேவை எனவும் அதனை தடை செய்ய இயலாது எனவும் ஜெர்மனி அதிபர் ஷோல்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதே நிலையை பிரிட்டனும் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

l    உக்ரைனுக்கு சென்று ரஷ்யாவுக்கு எதிராக போரிட அடியாள் சேர்ப்புக்கு பல தேசங்களில் விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன. ஊதியம் ஒரு நாளைக்கு 1000 டாலர் முதல் 2000 டாலர் எனவும் போனசும் உண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

l    அமெரிக்காவின் பேச்சை கேட்காமல் ஐ.நா.வில் நடுநிலை வகித்த காரணத்தால் வங்கதேசத்திற்கு தருவதாக ஏற்றுக்கொண்ட 4 லட்சம் தடுப்பூசிகளை தர இயலாது என லிதுவேனியா அறிவித்துள்ளது.

l    மார்ச் 10ஆம் தேதி ரஷ்ய வெளியுறவு அமைச்சரும் உக்ரைன் வெளியுறவு அமைச்சரும் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் துருக்கி வெளியுறவு அமைச்சரும் பங்கேற்கிறார்.

- தொகுப்பு : அ. அன்வர் உசேன்