ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, ரஷ்ய ராணுவம் உக்ரைனின் கிழக்கு நகரமான மரின்காவை முழுவதுமாக கைப்பற்றியுள்ளதாக தெரி வித்துள்ளார். கடந்த மே மாதம் பாக்முத் நகரை கைப்பற்றிய பின் மிகப்பெரும் முன்னேற்றமாக ரஷ்யா இதை கருதுகிறது.எனினும் உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் ஷ்டுபுன் ரஷ்யாவின் அறிவிப்பை மறுத்துள்ளார்.