world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக பல லத்தீன் அமெரிக்க தேசங்களில் உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  2. போரில் பிடிபட்ட ஒரு ரஷ்ய வீரருக்கு போர்க் குற்றங்களை சுமத்தி ஆயுள் தண்டனையை உக்ரைன்  விதித்துள்ளது. இது எதற்கான நிர்ப்பந்தம் என கேள்வி எழுந்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் நியாயமற்ற தடைகள் காரணமாக ரஷ்யா தனது பொருளாதார உறவு களை சீனாவுடனும் ஏனைய தேசங்களுடனும் அதிகரித்துக் கொள்ளும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் கூறியுள்ளார்.
  3. ரஷ்யாவுக்கு எதிரான ஆதரவை திரட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் சென்றார். ஆனால் அந்த இரண்டு  தேசங்களிலும் அமெரிக்கா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தன் தேசத்தின் மீது சுவீடன் தடைகளை விதித்திருக்கும் பொழுது நேட்டோவில் சுவீடன் இணைவதை எப்படி ஏற்க இயலும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
  4. பேரம் படியுமா? நாஜி அமைப்பான அசோவ் பட்டாலியனின் வீரர் களை உக்ரைனில் பிடிபட்ட ரஷ்ய வீரர்களுக்கு ஈடாக  பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
  5. மேற்கு உக்ரைனையும் பெலாரசின் ஒரு பகுதி யையும் ஆக்கிரமிக்க போலந்தும் நேட்டோவும் சதித்  திட்டம் தீட்டுகின்றன என பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷெங்கோ பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
  6. உலகப் பொருளாதாரம் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிக மிக மோசமான சூழலில்  உள்ளது என ஐ.எம்.எஃப். கவலை தெரிவித்துள்ளது.
  7. உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக எண்ணெய் வளம் கொண்ட நாடான நார்வே அதிக அளவில் லாபம் ஈட்டுகிறது எனவும் லாபத்தின் ஒரு பகுதியை போலந்துக்கும் உக்ரைனுக்கும் தர வேண்டும் எனவும் போலந்து கோரிக்கை விடுத்துள்ளது. இதனை நார்வே நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு நியூசிலாந்து அடி பணிந்தது.
  8. உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க நியூசிலாந்து ஏற்றுக்கொண்டுள்ளது.
;