உக்ரைன் ரஷ்ய போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்தியாவில் #Istandwithputin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையே தொடங்கிய போர் இன்று 7வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இந்தியா நடுநிலைவகிக்கும் என்று ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் டுவிட்டரில் #Istandwithputin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக போர் குறித்த உண்மை நிலவரத்தை மறைப்பதாக டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.