world

உக்ரைன்-ரஷ்யப் போர் நிகழ்வுகள் உண்மைத் தகவல்கள்

  •     போரினால் பாதிக்கப்பட்ட டான்பாஸ் மற்றும் உக்ரைன் பகுதிகளுக்கு ரஷ்யா 430 டன் உணவுப் பொருட்களை உதவியுள்ளது. இவ்வாறு உதவி செய்ய வரும் ரஷ்யர்களை வேட்டையாடிக் கொல்லுமாறு உக்ரைன் அரசியல்வாதிகள் சிலர் கூறுகின்றனர். இந்த செய்திகள் ஊடகங்களில் இடம் பெறாது; அதில் ஆச்சர்யமும் இல்லை.
  •     உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் டான்பாஸ் பகுதியின் பெரும்பான்மை நிலப்பரப்பை அந்த  குடியரசுகளின் ராணுவம் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட பல இடங்களில் கொத்துக் கொத்தாக மக்கள் புதைக்கப்பட்ட இடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கொலைவெறியை உக்ரைனின் நாஜி துணை ராணுவப் படைகள் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
  •     ரஷ்யாவின் சில முக்கிய மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு புடின் தடை விதித்து உள்ளார். இதில் மேற்கத்திய நாடுகளுக்கு தேவையான உரம் உட்பட பல உண்டு. தன் மீது வர்த்தகத் தடை விதிப்பதற்கு, பதிலடி தருகிறதா ரஷ்யா?
  •     ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அரபுநாடுகளை திரட்டி வருகிறது அமெரிக்கா. அது தொடர்பாகசவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச ஜோ பைடன் முயற்சித்த பொழுது அந்த இரு நாடுகளும், அடக்கத்துடன் அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர் என ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிக்கை தெரிவிக்கிறது.
  •     நேட்டோவுக்கு எதிராகவும் உக்ரைனில் நாஜிக்கள் இருப்பது  குறித்தும் பேசினால் அல்லது சமூக ஊடகங்களில் செய்திகள் பதிவிட்டால் சிறை என ஆஸ்திரேலியா அரசாங்கம் எச்சரித்துள்ளது.  இதுதான் மேற்கத்திய ‘ஜனநாயகம்’ போலும்!
  •     உக்ரைனில் அமெரிக்க உதவியுடன் உயிரி ஆயுதங்கள் பரிசோதனை நிலையங்கள் இருந்ததை ரஷ்யப் படைகள் கண்டுபிடித்துள்ளன. இவை ரஷ்யாவின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என அமெரிக்கா அதிகாரி நுலுண்ட் கவலை தெரிவித்துள்ளார். அதேசமயம் அமெரிக்கா உருவாக்கிய இந்த பரிசோதனை நிலையங்கள் சாதாரண நோய் ஆய்வுகளுக்கானதுதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சாதாரணமான பரிசோதனை நிலையங்கள்தான் எனில் அவை ரஷ்யாவின் கைகளுக்கு செல்வது ஆபத்தானது என அமெரிக்கா ஏன் கூற வேண்டும் எனும் நியாயமான கேள்விகளை சிலர் எழுப்புகின்றனர்.
  •     அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்துள்ள எரிபொருள் தடைகளில் யுரேனியம் சேர்க்கப்படவில்லை. ஏன்? ஏனெனில் அமெரிக்காவின் சில அணு ஆராய்ச்சிகளுக்கு ரஷ்யாவின் விலை மலிவான யுரேனியம் மிக தேவை. இது ரஷ்யாவுக்கு தெரியாமலா இருக்கும்? விரைவில் ரஷ்யாவின்  தடையை எதிர்பார்க்கலாம்.
  •      உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி போரோஷென்கோ அவர் பதவியில் இருந்த பொழுது பேசிய காணொளி வைரலாகியுள்ளது. அதில் அவர் பேசுகிறார்:
  •     உக்ரைன் மக்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் டான்பாஸ் மக்களுக்கு வேலை கிடைக்காது.
  •     நமக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அவர்களுக்கு கிடைக்காது.
  •     நமது குழந்தைகள் சிறந்த பள்ளிகளுக்கு செல்வார்கள். அவர்களின் குழந்தைகள் பதுங்கு குழியில் பயந்து உட்கார்ந்திருக்க வேண்டும்.
  •     ஏன் டான்பாஸ் பகுதி ரஷ்யாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிய இது ஒரு நிரூபணம்.
  •     ரஷ்யா மீது தடைகள் விதிக்க வேண்டும் என அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு 75 சதவீத தேசங்கள் செவி சாய்க்கவில்லை.  குறிப்பாக பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மறுத்துவிட்டன. ஆனால் தடை விதித்த 25 சதவீத தேசங்களின் கைகளில்தான் பொருளாதாரத்தின் முக்கிய குடுமி உள்ளது என்பதும் இன்னொரு உண்மை.
  •     ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக பிரிட்டனில் மக்கள் அதிகமான எரிபொருள்/மின்சார கட்டணங்களை சுமக்க வேண்டியிருக்கும் எனவும் விலைவாசி உயர்வும் இருக்கும் எனவும் அமைச்சர் டிரெஸ் எச்சரித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை சுட்ட அதே நேரத்தில் தம் கால்களிலும் சுட்டுக்கொண்டனரா?
  •     ரஷ்யா மீது தடைகள் விதிப்பதால் எத்தகைய விலையை தரவேண்டியிருக்கும் என சிலர் உணர மறுக்கின்றனர் என ஜெர்மனியின் பொருளாதார அமைச்சர் அங்கலாய்த்துள்ளார்.
  •     ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு பகுதி நாடுகள் உக்ரைனுக்கு உடனடியாக ஒன்றியத்தில் துணை உறுப்பினர் அந்தஸ்து தர வேண்டும் எனவும் மேற்கு பகுதியில் இருக்கும் நாடுகள் அப்படி தரக்கூடாது எனவும் வாதிடுகின்றனர். இதில் ஐரோப்பிய ஒன்றியம் பிளவுபட்டு நிற்கிறது.
  •  
  •     வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டாலும் ரஷ்யாவுடன் வணிகம் செய்ய பொருத்தமான சில வழிகளை கண்டு பிடிக்க வேண்டும் என துருக்கி கருத்து தெரிவித்துள்ளது.
  •     உலகின் பல பாகங்களில் அதிகரித்து வரும் விலை உயர்வு குறித்து தன்னால் எதுவும் செய்ய இயலாது என பைடன் கை விரித்துள்ளார்.
  •     எங்களின் எண்ணெய் வாங்குவதை தடை செய்கிறீர்களா? தாராளமாக செய்து கொள்ளுங்கள். ஆனால்  உங்கள் தடை காரணமாக பலன் அடைய போவது யார்? என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள் என ரஷ்யாவின் உதவி பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஐரோப்பிய நாடுகளுக்கு கூறியுள்ளார்.
  •     உக்ரைன் சார்பாக அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற டெனிஸ் கிரீவ் என்பவர் “துரோகி” எனக் குற்றம்சாட்டப்பட்டு உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபை கூறியுள்ளது.
  •     தான் நேட்டோவில் சேரும் எண்ணத்தை கை விட்டு விட்டதாகவும் நேட்டோவினர் ரஷ்யாவிடம் பயப்படுகின்ற னர் எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
  •     ரஷ்யாவுக்கு உதவினால் சீனா மீதும் நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. தான் ஒன்று செய்துவிட்டால் உலகமே தன் பின்னால் திரள வேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் எண்ணுகிறது.
  •     சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்/ பிரான்சு ஜனாதிபதி மேக்ரோன்/ ஜெர்மனி ஜனாதிபதி ஷோல்ஸ் ஆகியோர் உக்ரைன் போர் குறித்து இணையதளம் மூலம் விவாதித்தனர்.ஏன் அமெரிக்கா இணைக்கப்படவில்லை? ஏன் இந்தியாவின் கருத்து கேட்க வேண்டும் என எவரும் நினைப்பது இல்லை?
  •     கிரிமியா குறித்தும் டான்பாஸ் பகுதியில் உள்ள இரு குடியரசுகள் குறித்தும் விவாதிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். தன் நிலையில் பல்டி அடிக்காமல் இருந்தால் இது தீர்வுக்கு வழிவகுக்க வாய்ப்பு உள்ளது. 
  •     ஒரு தேசம் என்ற முறையில் எப்பொழுதும் ரஷ்யாவை மதிக்க வேண்டும் எனவும் ரஷ்யாவை இணைக்காமல் ஐரோப்பாவில் எந்த ஒரு நிரந்தரமான தீர்வும் சாத்தியம் இல்லை எனவும் பிரான்சு ஜனாதிபதி மேக்ரோன் கூறியுள்ளார்.
  •     வெள்ளை இன அகதிகள் வரலாம்; ஆனால் ஆப்பிரிக்க, ஆசிய அகதிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என ஸ்பெயின் நாடாளுமன்ற வலதுசாரி உறுப்பினர் திமிருடன் பேசியுள்ளார்.
  •      கடந்த வாரத்தில் ரஷ்ய ஆதரவு உக்ரைன் மேயர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது உக்ரைன் நாஜிக்களின் வேலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


ஒரு டுவிட்டர்வாசியின் நியாயமான கவலை

  •     நேட்டோ தலிபான்களை பயிற்றுவித்தது. ஆப்கானிஸ்தான் அழிந்தது.
  •     நேட்டோ ஐ.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை பயிற்றுவித்தது. லிபியாவும் சிரியாவும் அழிந்தன.
  •     நேட்டோ அசோவ் மற்றும் ரைட் செக்டார் நாஜிக்களை பயிற்றுவித்தது. உக்ரைன் அழிந்து கொண்டுள்ளது. 
  •     இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்வது எப்பொழுது?