world

முட்டாள்தனமான வதந்திகளைப் பரப்பாதீர்

மாஸ்கோ, ஜன.24- உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் தங்கள் ஆதரவு தலைவர் ஒருவரைப் பதவி யில் அமர்த்த ரஷ்யா முயல்கிறது என்று பிரிட்டன் குற்றம் சாட்டியி ருந்தது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், “நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்யாவுடன் மோதலை வளர்க்க விரும்புகின்றன. உக்ரைனில் தங்கள் ஆதரவு தலை வரை அமர்த்த ரஷ்யா விரும்புகிறது என்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. உக்ரைனைச் சுற்றி பதற்றம் நிலவ வேண்டும் என்றே இந்த நாடுகள் விரும்புகின்றன. இது போன்ற முட்டாள்தன மான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பிரிட்டனின் வெளியுறவுத் துறையை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகமும் பிரிட்டன் வெளியிட்டு வரும் அறிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மோதலைத் தூண்டும் வகையில் தொடர்ந்து அறிக்கைகளை பிரிட்டன் வெளியிட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ள தூதரகம், “குறுகிய பார்வை கொண்ட கொள்கையால் புறந்தள்ளப்பட்டுள்ள பிரிட்டன், ரஷ்ய எதிர்ப்பு அறிக்கைகள் மூலம் தனது இருப்பைக் காட்டிக் கொள்ள முயல்கிறது. ஒவ்வொரு நாளும் இதுபோன்ற பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டு, பின்னர் சர்வாதிகாரிகளை எதிர்த்து போராடுகிறோம் என்று சொல்லிக் கொள்ளவே நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

ஆயுத வியாபாரம் அமோகம்

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இரண்டாவது தவணையாக 90 டன் எடையுள்ள ஆயுதங்கள் உக்ரைனுக்கு வந்துள்ளன. ரஷ்யா படையெடுக்கப் போகிறது என்ற கட்டுக் கதையை அவிழ்த்துவிட்டு, அது அம்பலமாவதற்குள் வியாபாரம் செய்துவிட வேண்டும் என்று வேக, வேகமாக ஆயுதங்களை உக்ரைன் தலையில் அமெரிக்கா கட்டி வருகிறது. மேலும் ஆயு தங்கள் அனுப்பப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
 

;