world

img

பிரிக்ஸ் கூட்டமைப்பில் 5 புதிய நாடுகள் உறுப்பினர்களாகச் சேர்ப்பு!

எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த 15-ஆவது உச்சி மாநாட்டில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆர்ஜென்டீனா ஆகிய 6 நாடுகளை உறுப்பினர்களாகச் சேர்க்கும் பரிந்துரைக்கு ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதை அடுத்து, பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் முடிவை ஆர்ஜென்டீனா கடந்த வாரம் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்மூலம், 10 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பாக பிரிக்ஸ் மாறியுள்ளது.