புதுதில்லி, அக்.22- இஸ்ரேலின் குண்டுவீச்சால் பாதிக்கப் பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு நிவாரணப் பொருட்களை இந்தியாஅனுப்பியுள்ளது. அக்டோபர் 19 அன்று பாலஸ்தீன அதி கார சபையின் ஜனாதிபதி முகம்மது அப்பாஸுடன் உரையாடிய பிரதமர் மோடி, இஸ்ரேல்-பாலஸ்தீன விவகா ரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டையே தொடர்வ தாகவும் பாலஸ்தீனத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்புவது குறித்தும் உறுதியளித்தார். முன்னதாக அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் போர் அறிவித்த சில மணி நேரத்தில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசியது அரபு நாடுகளையும் பிற நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சுதந்திர பாலஸ்தீனம் என்ற இந்தியாவின் நீண்ட காலக் கொள்கையில் மாற்றமில்லை என்று சமாளித்திருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யன்று பாலஸ்தீன மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சானிட்டரி நாப்கின்கள், தண்ணீர் சுத்தி கரிப்பு மாத்திரைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என 6.5 டன் மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களு டன் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு இந்திய விமானப்படை விமானம் சி-17 புறப்பட்டுச் சென்றது.