uஹிஸ்புல்லாவை முழுவதுமாக அழிக்க முடியாது என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் காலண்ட் கூறியுள்ளார். ஹமாசை ஒழிக்க வேண்டுமானால் இப்போது ஹிஸ்புல்லாவுடன் அரசியல் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
uஅரேபிய தலைவர்கள் தங்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கனிடம் அரேபிய மக்கள் அமெரிக்கா மீது பெரும் கோபத்துடன் உள்ளனர் என கூறியுள்ளனர்.
uபிரான்சின் இடதுசாரி தலைவர் ஜீன் லுக் மெலங்கோன் லெபனானை இஸ்ரேல் குறிவைப்பதை பிரான்ஸ் கண்டிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
uசெங்கடலில் இஸ்ரேல் கப்பல்களை ஏமனின் ஹவுதி அமைப்பினர் தாக்கிய பின்னர் அங்கு ஒரு மாதத்தில் கப்பல் போக்குவரத்து 20% குறைந்துள்ளது.
u2023 அக்டோபர் 7ம்தேதி அன்று ஹமாஸ் வீரர்களுடன் இருந்த 12 இஸ்ரேலிய பணயக்கைதி களை இஸ்ரேல் ராணுவம் தனது ஆக்கிரமிப்பு எல்லைக்குள் டாங்கிகள் மூலம் தெரிந்தே படுகொலை செய்ததை விரிவாக விசாரணை செய்ய வேண்டும் என இஸ்ரேலிய பத்திரிகை ஹாரெட்ஸ் வலியுறுத்தியுள்ளது.
uஇஸ்ரேலின் குண்டுவீச்சு ஏற்படுத்தும் கொடூரங்கள் காரணமாக அமெரிக்க தொழிற்சங்கங்கள் மேலும் மேலும் சியோனிச எதிர்ப்பு நிலையை எடுத்து வருகின்றன.
uஏவுகணைகள் மற்றும் டிரோன் மூலம் ஒரு பெரிய தாக்குதலை செங்கடலில் ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்தியுள்ளனர் என அமெரிக்க ராணுவ மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பன்னாட்டு
கப்பற்படை சரியாக அமையவில்லையா அல்லது ஏமன் மீது அமெரிக்காவின் பெரும் தாக்குதல் திட்டமிடப்படுகிறதா என்பது சில நாட்களில் தெரியவரும்.
uஅமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உரசல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக செய்திகள் கசிகின்றன. எனினும் ஆயுதங்களை நிறுத்தாமல் இஸ்ரேலை, அமெரிக்கா கட்டுப்படுத்த முடியும் என்பது பகற்கனவு.
uகாசா பகுதிக்குள் சர்வதேச பத்திரிகையாளர்கள் செல்வதற்கு மீண்டும் இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளது. தனது கொலை பாதகங்கள் மேலும் அம்பலமாகிவிடும் எனும் பயம்!
uகாசா போர் தொடங்கியதிலிருந்து சிரியா-இராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் 120 முறை தாக்குதல்களுக்கு உள்ளாயின என ராணுவ அதிகாரி ஒருவர் அல் மயாதீன்
எனும் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். இதன் விளைவாக பாதிப்புகள் என்ன என்பதை அவர் கூறவில்லை.
uஇஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதை வெனிசூலா ஆதரித்துள்ளது. இவ்வாறு பெல்ஜியமும் வழக்கு தொடர வேண்டும் என பெல்ஜியத்தின் உதவி பிரதமர் பெட்ரா டி சட்டர் கூறியுள்ளார். ஸ்பெயின் அரசும் இந்த வழக்கில் இணைய வேண்டும் என அந்த நாட்டின் இடதுசாரி இயக்கமான பொடொமாசின் பொது செயலாளர் இயான் பெல்லோரா வற்புறுத்தியுள்ளார்.
uதனக்கு எதிராக சதி தனது கட்சிக்கு உள்ளேயே நடக்கிறது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஐயம்
கொண்டுள்ளாராம்! விரைவில் தன்னை பதவிநீக்கம் செய்ய தனது கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் கை கோர்க்க முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அ.அன்வர் உசேன்