world

img

6 வயது பாலஸ்தீன சிறுவன் 26 முறை குத்தி கொலை

6 வயது பாலஸ்தீன சிறுவன்  26 முறை குத்தி கொலை

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில்  வீட்டு வேலை பார்த்து வந்த வந்த பாலஸ்தீன்-அமெரிக்கரான ஹனான் ஷாஹின் என்பவரது 6 வயது மகனை  71 வயதான அவர்களது முதலாளி ஜோசப் மிக கொடூரமான முறையில் 26 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்

இஸ்ரேல் பாலஸ்தீனம்  மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இனவெறி தூண்டப் பட்டு பல வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன.அதன் பின்னணியில் தான் இந்த கொலையும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

கடந்த சனிக்கிழமை அன்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து  அந்நகர காவல்துறை ஜோசப்பை கைது செய்தது.“நீங்கள் முஸ்லீம்கள். நீங்கள் கட்டாயம் சாகவேண்டும்” என கூறிக் கொண்டே கதவை உடைத்து சிறுவனின் தாயின் கழுத்தை நெரித்தும்  ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 7 இன்ச் கத்தி யால் அந்த  சிறுவனை 26 முறை குத்தி கொலையும் செய்த தாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போது சிறுவனின்  தாய் அவசர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பில் , சிறுவனின்  உறவினர்  யூசப் ஹனான் “நாங்கள் விலங்குகள் அல்ல, மனிதர்கள். மக்கள் எங்களை மனிதர்களாகப் பாருங்கள் , மனிதர்களாக உணருங்கள், மனி தர்களாக நடத்துங்கள், ஏனென்றால் நாங்களும் மனிதர்கள் என கண்ணீர் மல்க பேசினார்.