பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் விசாரணை எனக் கூறி ஆண்களை தொடர்ச்சியாக காவல் துறை கைது செய்து வருகிறது. கைது செய்யப்படும் நபர்கள் காணாமல் போவ தற்கும், பலூச் என்ற நபர் சுட்டுப் படு கொலை செய்யப்பட்டதற்கும் நீதி கேட்டு தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களது உறவினர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி 200 பெண்களை கைது செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.