world

img

‘இஸ்ரேல் - காசா போரை உடனே நிறுத்துங்கள்!’

நியூயார்க், டிச. 8 - பாலஸ்தீனத்தின் காசா மீதான போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.மன்றத்தின் பாது காப்புக் கவுன்சில் நிறை வேற்றிய தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்காத நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் ஐ.நா. சாசனத்தின் சட்டப்பிரிவு 99-ஐ கையில் எடுத்துள்ளார்.

ஐ.நாவின் உண்மையான அதிகாரம் 193 உறுப்பு நாடுகளிடம்- குறிப்பாக பாது காப்புக் கவுன்சிலில் உள்ள 15 நாடுகளி டம்தான் உள்ளது என்றாலும், பிரிவு 99 என்பது ஐ.நா. பொதுச்செய லாளருக்கு சுயாதீனமான சிறப்பு அதி காரங்களை வழங்குகிறது.

இந்தப் பிரிவு சர்வதேச அமைதி  மற்றும் பாதுகாப்பிற்கான புதிய  அச்சுறுத்தல்கள் குறித்த எச்சரிக்கை களை செய்யவும், பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்கு தனது சொந்த முயற்சியில் அழைப்பு விடுக்கவும் பொதுச் செயலாளருக்கு அனுமதி அளிக்கிறது.

அதன்படி, முற்றிலும் மனித பேரழி வுக்கான அபாயம் நிலவும் சூழலில், போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. பாது காப்புக் கவுன்சில் தீவிரமான நட வடிக்கை எடுக்காத நிலையில், 99-ஆவது பிரிவைப் பயன்படுத்தி அன்டோனியா குட்டரெஸ் கவனப்படுத்தி யுள்ளார்.

இது ஐ.நா. மன்றத்தில் அரிதாக நடக்கும் நிகழ்வாகும். 1971- இல் அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் யு தான்ட்,  இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படு த்தினார். இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்தை உறுப்பு நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவர இந்தப் பிரிவை அவர் கையில் எடுத்தார். அதன்பிறகு, 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான விவகாரத்தில் அன்டோனியா குட்டரெஸ் இந்தப் பிரிவை பயன்படுத்தியுள்ளார்.

இந்தப் பிரிவைப் பயன்படுத்துவது தொடர்பான கடிதத்தில், “இஸ்ரேலின் கடும் குண்டுவீச்சுக்கு மத்தியில், பாது காப்பான வீடுகள் இன்றி, வாழத் தேவை யான பொருட்களின்றி, விரக்தியான சூழல் நிலவும் கட்டத்தில்- மிக விரைவில் பொது ஒழுங்கு உருக்குலையும் என ஆபத்து உள்ளது. மனிதாபிமான உதவி களைக் கொண்டுசேர்ப்பது கூட இயலாத காரியமாக இருப்பதால், இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிக மோசமான அச்சுறுத்தலாக மாறும். எனவே, இந்தச் சூழலை,  பாதுகாப்பு கவுன் சிலின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வர இந்த சட்டப் பிரிவை பயன் படுத்துகிறேன்” என்று குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.