world

img

100 சதவிகித காகித பயன்பாடில்லாத உலகின் முதல் அரசாக மாறியது துபாய்

நூறு சதவிகிதம் காகிதங்களை பயன்படுத்தாத அரசாக, துபாய் மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இதன் மூலம் அரசுக்கு 1.3 பில்லியன் திரஹம் செலவு சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“டிஜிட்டல் தளத்தின் கீழ் இனி அரசின் அனைத்து நடைமுறைகளும் இருக்கும். துபாயில் டிஜிட்டல் வாழ்க்கையின் முதல் தொடக்கம் இது. புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட பயணத்தின் தொடக்கம் இது. உலக அளவில் இதன் மூலம் முன்மாதிரி அரசாக துபாய் அரசு திகழும். அரசின் செயல்பாடு மற்றும் சேவைகளை டிசைன் செய்வதற்கான ரோல் மாடலாக இருக்கும். துபாயின் வளர்ச்சிக்கும் இது வழிவகை செய்யும்” என இளவரசர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2018-இல் துபாயை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் காகிதமில்லா திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இனி துபாயின் 45 அரசு துறைகளும் காகித பயன்பாடு இல்லாமல் டிஜிட்டல் வடிவில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;