world

‘உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம்’

ஜெனீவா,ஜன.25-  உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே  முடிவு கட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் நம்பிக்கையுடன் தெரி வித்துள்ளார்.  இந்தியா உட்பட உலகில் பல்வேறு நாடு களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதி கரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதி கரித்து வருவதால், ஏப்ரல் மாதத்துக்குள் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ்  அதானோம் கேப்ரிசியாஸ் உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வில் பேசுகையில்,  இந்த ஆண்டுடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் . கொரோனாவை ஒழித்துக்கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக  சுகாதார அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து வருகிறது. நாடுகள் இந்த வியூகங்களை பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம்.கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளை தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். தொற்று முடியும் வரை காத்திருக்கக்கூடாது என்றார்.

;