world

கல்வி போதியுங்கள்

டோக்கியோ, மே 12- அமெரிக்க ராணுவத்தினருக்குப் போதிய அளவில் கல்வியைப் போதியுங்கள் என்று ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தின் ஆளுநர் டமாகி டென்னி அறிவுறுத்தியுள்ளார். பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாக தாக்கினார் என்று  அமெரிக்க ராணுவ வீரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.  இது தொடர்பாக ஒகினாவா மாகாண ஆளுநர் டமாகி டென்னி கருத்து தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குலுக்கு எதிராகக் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடை பெறுவதைச் சுட்டிக்காட்டும் மாகாண  நிர்வாகம், “ஒகினாவாவில் நிறுத்தப் பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின ருக்கு கல்வியும், மேலாண்மைத் திறனும் போதிய அளவில் கற்றுத் தரப்படவில்லை” என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு பல மோசமான குற்றங்கள் நடந்தன என்றும் டமாகி டென்னி குற்றம் சாட்டியுள்ளார்.