world

img

“இது ஜி-7 அல்ல; ஜி-1+6”

பெய்ஜிங், மே 29- அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ்,  இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய  நாடுகளைக் கொண்ட ஜி-7 அமைப்பு உலகில் பலம் வாய்ந்த அமைப்பு என்று கருதப் பட்டது. ஆனால், அமெரிக்காவின் சுயநலம் மற்றும் மேலாதிக்கத்தால், உலக முன்னேற்ற த்தை முன்னிறுத்தவோ அல்லது ஒன்றுபட்டு இயங்கவோ இந்த அமைப்பால் முடியவில்லை என்று சீன ஊடகமான சின்குவா விமர்சித்துள்ளது. தாங்கள் ஒற்றுமையாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், ஜி-7 அமைப்புக்குள் குத்து  வெட்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் இருந்தன. சொல்லப்போனால், இந்த அமைப்பை ஜி-7 என்று அழைப்பதை விட, அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் இருப்பதால் ஜி-1+6 என்றே அழைக்கலாம். தனது சுயநல நட வடிக்கைகளால் ஒன்றுபட்ட அணியாகத் தங்களைக் காட்டிக் கொள்ள முடியாமல் அமெரிக்காவின் கூட்டாளிகள் தவிக்கிறார்கள். மோதலுக்கும், நாடுகளைக் கீழ்ப்படியச் செய்வதற்குமான ஒரு கருவியாகவே உறுப்பு நாடுகளை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கும், அதன் கூட்டாளி களுக்கும் பரஸ்பர மரியாதை இருக்கிறது என்று சொன்னால் அது நிச்சயமாக உண்மையாக இருக்க முடியாது. ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்கா போட்டுக் கொண்ட பணவீக்கக் குறைப்பு சட்டம், ஐரோப்பிய நாடுகளை ஆத்திர மடையச் செய்தது. தங்களை அமெரிக்கா முதுகில் குத்தியதாக சில ஐரோப்பிய நாடுகள் உணர்ந்தன. அந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ள பெரும் அளவிலான மானியம் தங்கள் நலன் களைப் பாதிக்கச் செய்யும் என்று ஐரோப்பிய நாடுகள் கூறியும் அதுபற்றி அமெரிக்கா கவலைப்படவில்லை. பல சமயங்களில் அவர்களை அலட்சியமாக நடத்தவும் செய்தது. பனிப்போர் நிறைவு பெற்ற பிறகு தனது  மேலாதிக்கம்தான் என்று அமெரிக்கா நினைத்த தெல்லாம் போய்விட்டது. பன்முகத்தன்மை கொண்ட உலகை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உலகைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் லட்சியம் இன்னும் உள்ளது. அது அழிவைத் தருவதாகவும் இருக் கிறது. தனது மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள மோதல்களைத் தூண்டி விடு கிறது. பிளவுகளை உருவாக்கித் தன்னை அதி காரத்தில் வைத்துக் கொள்கிறது. அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வந்தபோதும் உக்ரைனில் போர் நடப்பதற்கு அமெரிக்காவின் லட்சியமே காரணமாகும். சீனா தொடர்பான விஷயங்களில் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு தனது  கூட்டாளிகளை அமெரிக்கா கட்டாயப்படுத்து கிறது. அமெரிக்காவின் இத்தகைய சூழ்ச்சி களைப் பார்க்கையில், ஒரு தளபதியும்,  ஆறு “பாதிக் கூட்டாளிகள், பாதி பாதிக்கப்பட்டவர்கள்” என்றுதான் ஜி-7 அமைப்பைச் சொல்ல வேண்டும். அமைதிக்காகவோ அல்லது உலகின் பொது நலனுக்காகவோ இந்த அமைப்பு இருக்க முடியாது. 

விழித்துக் கொண்ட நாடுகள்

உலகின் தெற்கு நாடுகள் என்று சொல்லப் படும் வளரும் மற்றும் ஏழை நாடுகள் அமெரிக்கா வின் இந்த சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டவை யாக மாறியுள்ளன. கண்களை மூடிக் கொண்டு  அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்தால் தங்களின் வருங்காலத்தைத்தான் இழக்க நேரிடும்  என்பதை அந்த நாடுகள் புரிந்து கொண்டுவிட்டன.  தங்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்த அனுமதியோம் என்ற உறுதியோடு இந்த நாடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றன. ஜி-7ல் சில நாடுகள் கூட, அமெரிக்காவின் ஆணைகளை அப்படியே ஏற்க மறுத்து வரு கின்றன. சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்கா சொன்னபோது, ஜி-7 அமைப்பு ஒன்றும் சீனா எதிர்ப்புக் கூட்டணி அல்ல என்று ஜெர்மனியும், பிரான்சும் கூறின. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்துடன் எதிர்மறைப் போக்கைக் கடைப்பிடிப்பது அவ சியம் இல்லை என்றும் அந்த நாடுகள் தெளிவாகக் கூறிவிட்டன. இவ்வாறு சின்குவா தனது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
 

;