world

img

1496 மறுசுழற்சி வாஷிங் மிஷின்களால் பிரமாண்ட பிரமிட் உருவாக்கி கின்னஸ் சாதனை

இங்கிலாந்தில் 1496 மறுசுழற்சி வாஷிங் மிஷின்களால் பிரம்மாண்ட பிரமிட் உருவாக்கி கின்னஸ்சாதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த கரிஸ் பிசி வேர்ல்ட் நிறுவனம் மறுசுழற்சி செய்யப்பட்ட 1496 வாஷிங் மிஷின்களை பயன்படுத்தி பிரம்மாண்ட பிரமிட்டை வடிவமைத்துள்ளது. 44 அடியும் 7 இன்ச் உயரம் கொண்ட இந்த பிரமிட்டின் அடிப்பகுதியில் 256 வாஷிங் மிஷின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 பக்கமும் 31 அடி 7.5 அங்கும் கொண்டு பிரமிட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறுசுழற்சியின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே முயற்சி என்று அந்நிறுவம் தெரிவித்துள்ளது. 
இதைத்தொடர்ந்து  இந்த வாஷிங் மிஷின் பிரமிட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

;