world

img

சூடானில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்

சூடானில் ஆயுதப் படைகளுக்கும் அதிரடி படைக்கும் இடையே தொடரும் சண்டைகளை ஆப்பிரிக்க ஒன்றியம் கடுமையாக கண்டித்திருப்பதுடன், உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத் திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நியாயமற்ற அழிவுகரமான முறையில் நடந்து வரும் இந்த உள்நாட்டுப் போர் சூடான் மற்றும் அண்டை நாடு களில் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சூழ் நிலையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் கண்டித்துள்ளது.