world

img

‘பி.1.1.529’ கொரோனா திரிபுக்கு ‘ஓமிக்ரான்’ என பெயரிட்ட உலக சுகாதார நிறுவனம்

தென்னாப்பிரிக்காவில் இந்த வாரத் தொடக்கத்தில் கண்டரியப்பட்ட ‘பி.1.1.529’ என்ற புதிய கொரோனா திரிபுக்கு ஓமிகரான் என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. 

தென் ஆப்ரிக்காவில் இந்த வாரத் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா திரிபு இதுவரை வந்த திரிபுகளில் மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இந்த புதிய கொரோனா திரிபு, ‘பி.1.1.529’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் இன்று இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று பெயரிட்டுள்ளது. கிரேக்கத்தில் ‘ஒமிக்ரான்’ என்றால் ‘சிறிய’ என்று அர்த்தம். இந்த புதிய திரிபு, மிக அதிகமாகவும் வேகமாகவும் பன்மடங்காகப் பெருகும், பிறழ்வும் தன்மையோடு இருப்பதாக இதைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த புதிய திரபை ‘கவலை கொள்ள வேண்டிய திரிபு’ (Variant of Concern) என்றும் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளனர்.

;