world

img

அடுத்த கட்டத்தில் எங்கள் ஆய்வுகள் சீனா பெருமிதம்

பெய்ஜிங், நவ.29- விண்வெளியில் அமைக்கப்படவிருக்கும் சீனாவின் நிறைவுக்கட்டப் பணிகளை முடிக்கும் வகையில் சென்சோ-15 விண்வெளி வீரர்கள் செயல்படுவார்கள் என்று சீனாவின் விண்வெளிக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த விண்வெளிப்பயணத்தில் ஃபெய் ஜூன்லாங், டெங் கின்மிங், ஜாங் லு ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் செல்கிறார்கள். ஆறு மாத காலம் வரை விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் அவர்கள் அடுத்த ஆண்டு மே மாதம் திரும்பி வருவார்கள். சென்சோ-14 பயணத்தின்போது சென்று விண்வெளியில் தங்கியுள்ள மூவரும் பூமிக்குத் திரும்பி வருகிறார்கள். தற்போது செல்லும் அணிக்கு ஃபெய் ஜூன்லாங் தலைவராக இருப்பார். 57 வயதாகும் இவர், 2005 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சென்சோ-6ன் விண்வெளிப்பயணத்திற்கும் தலைவராக இருந்தார். இவர் தலைமையில் தற்போது சென்றுள்ள அணி, ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உதவும் 15 கட்டுமானங்களை அமைத்து, அவற்றைப் பரிசோதனையும் செய்து பார்க்கப் போகிறார்கள். சின்சோ-14 விண்வெளி வீரர்களும், சின்சோ-15 மூலமாகத் தற்போது செல்பவர்களும் விண்வெளியில் சந்தித்துக் கொள்ளப் போவது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும் என்று சீன விண்வெளிக்கழகம் தெரிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தை ஆறு பேரைத் தாங்கிக் கொள்ளும் ஒன்றாக மாற்றும் பணியில் சின்சோ-14 வீரர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்.