world

img

நியோ-கோவ் என்கிற புதிய கொரோனா வைரஸ்-விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து நியோ-கோவ் என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சீனாவின் வுஹான் நகர ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 நியோ-கோவ் உருமாற்றம் அடைந்த கோவிட் 19 வைரஸ் கிடையாது. இது முழுக்க முழுக்க புதிய வகை சார்ஸ் கோவிட் ஆகும். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கோவிட்-19 என்பது சார்ஸ் குடும்பத்தின் ஒரு வகையாகும்.

சார்ஸ்-கோவிட் வைரஸில் பல பிரிவுகள் உள்ளன. 2003-2004ல் பரவியது ஒரு வகையான சார்ஸ் கோவிட் ஆகும்.அதேபோல் சார்ஸ் கோவிட் வைரஸின் இன்னொரு வகை 2021ல் மத்திய கிழக்கு நாடுகளில் பரவியது அதை மெர்ஸ் என்று அழைத்தனர்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நியோ-கோவ் கொரோனா வைரஸின் உருமாற்றம் அல்ல. மாறாக சார்ஸ்-கோவிட் குடும்பத்தை சேர்ந்த புத்தம் புதிய வைரஸ்தான் நியோ-கோவ்.இதை தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக சீனாவின் வுஹான் ஆராய்ச்சியாளர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கையில், நியோ-கோவ் என்கிற கொரோனாவை கண்டுபிடித்து இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வெளவால்கள் இடையே இந்த நியோ-கோவ் பரவி வருகிறது. ஆனாலும் இது முழுக்க முழுக்க புதிய வைரஸ் என்றும் சொல்ல முடியாது. மெர்ஸ் வகை வைரசுக்கு கொஞ்சம் நெருக்கமானது. மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ் பரவலுக்கு இதுவும் ஒரு வகையில் காரணமாக இருந்ததாக கருதப்படுகிறது.

இந்த நியோ-கோவ் இப்போது மனிதர்களிடம் பரவவில்லை. ஆனால் அதற்கான தூரம் அதிகம் இல்லை. வெளவால்கள் இடையே பரவும் இந்த நியோ-கோவ் விரைவில் மனிதர்களிடமும் பரவலாம். வெவ்வால்கள் மட்டுமின்றி மற்ற சில விலங்குகள் இடையிலும் இது பரவி வருகிறது. இதில் ஒரே ஒரு சின்ன உருமாற்றம் ஏற்பட்டால் போதும் அது மனிதர்களிடம் பரவ தொடங்கிவிடும்.

இதில் ஒரு உருமாற்றம் ஏற்பட்டால் போதும் PDF-2180-CoV எனப்படும் புதிய வகை நியோ-கோவ் உருவாகும். அது மனிதர்களின் செல்களுக்குள் செல்லும் திறனை பெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். bioRxiv  என்ற ஆய்வு பக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த கட்டுரையில், இன்னொரு முக்கியமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் கொரோனா வைரஸ் செல்களுக்குள் கொம்புகளை பயன்படுத்தி அங்கேயே உள்ளே நுழையும். ஆனால் இந்த நியோ-கோவ் கொம்புகள் கொஞ்சம் வித்தியாசமானது.

உடலில் இருக்கும் ACE2 receptor (Angiotensin-converting enzyme 2 - இது மனித உடலில் காணப்படும் ஒரு வகை மெம்பரின்) உடன் இது வித்தியாசமாக இணையும். அதாவது இது மனித உடலில் இருக்கும் செல்களோடு நியோ-கோவ் வித்தியாசமாக இணையும் திறன் கொண்டது. எனவே இதற்கு எதிராக இம்யூன் தடுப்பு மருந்துகள் வேலை செய்யாது என்றும், ஏற்கனவே நியோ-கோவ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படலாம் என்றும் வுஹான் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அதாவது கொரோனாவிற்கு வேக்சின் உருவாக்கியதை போல அவ்வளவு எளிதாக நியோ-கோவ் வந்தால் தடுத்து விட முடியாது. மெர்ஸ் கோவிட் மற்றும் கோவிட் 19 இரண்டின் குணமும் இதில் உள்ளது. நியோ-கோவ் என்பது கோவிட் 19 போல வேகமாக பரவும், அதேபோல் மெர்ஸ் கோவிட் போல அதிக மரணங்களை ஏற்படுத்தும். அதாவது வேகமாக பரவ கூடிய நியோ-கோவ் மனிதர்களிடம் வந்தால் பாதிக்கப்படும் 3ல் ஒருவர் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதாவது பலர் பலியாகலாம் என்று வுஹான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் இப்போது இது மனிதர்களிடம் பரவவில்லை என்பதே ஒரு நல்ல செய்தியாகும். இப்போது வெளவால்கள் இடையே மட்டுமே பரவுகிறது. வேறு சில விலங்குகளிடமும் இந்த நியோ-கோவ் உள்ளது. சின்ன உருமாற்றம் அடைந்தால் கூட இது மனிதர்களிடம் பரவும் திறனை பெறும். எனவே, கவனமாக இருக்க வேண்டும், என்று வுஹான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

;