world

img

ஈரானுக்கு வரவேற்பு

பெய்ஜிங், ஜூலை 1- பிரிக்ஸ் அமைப்பில் சேர விண்ணப்பம் செய்துள்ள ஈரானின் செயலுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் வரவேற்பு அளித்துள்ளன. பிரேசில், ரஷ்யா,  இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பில் சேர ஈரான் விண்ணப்பித்திருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், “பல நாடுகளை நாங்கள் கவனித்து வருகிறோம். அவற்றில் குறிப்பாக, ஈரான் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய இரு நாடுகளும் பிரிக்ஸில் சேர்வதற்கான விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. பிரிக்ஸ் விரிவாக்கத்தை நாங்கள் தீவிரமாக ஆதரிக்கிறோம்” என்றார். இதுபோன்றே ரஷ்யாவின் வெளியுறவுத்துறையும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.