world

சீனா - நியூசிலாந்து உடன்பாடு

சீனா - நியூசிலாந்து உடன்பாடு வர்த்தகம், விவசாயம், வனப்பகுதி, கல்வி மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு உடன்பாடுகளில் சீனாவும், நியூசிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன. சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் நியூசிலாந்தின் பிரதமர் கிரிஸ் ஹிப்கின்ஸ் ஆகிய இருவரும் சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார்கள். அந்தப் பேச்சவார்த்தையின் நிறைவில் இந்த உடன்பாடுகள் எட்டப்பட்டன. பசுமை மற்றும் மின்சார வண்டிகளுக்கான தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு இருக்கும் என்று சீனா உறுதியளித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தில் சீனா பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. சீனப் பிரதமரைச் சந்தித்தபின்னர், அந்நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் கிரிஸ் ஹிப்கின்ஸ் சந்தித்துப் பேசினார். பிற வளர்ந்து வரும் நாடுகளுடனான உறவுக்கு, நியூசிலாந்துடனான உறவு முன்மாதிரியாக இருக்கிறது. அதனால் நியூசிலாந்துடனான உறவை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார். சீனாவுடனான தாராள வர்த்தக உடன்பாட்டில் முதன்முதலில் கையெழுத்திட்ட நாடு நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2008 ஆம் ஆண்டில் இது கையெழுத்தானது.