world

img

சீனாவின் அமைதித் திட்டம் ஏற்புடையது - புடின்

பேச்சுவார்த்தையின் சிறப்பம்சங்கள்

*ரஷ்யாவின் மிக முக்கியமான பொருளாதாரக் கூட்டாளி சீனா என்று புடின் தெரிவித்தார்.
*ரஷ்யாவுக்கு அரசுப் பயணமாக ஜி ஜின்பிங் சென்றுள்ளார்.
*    உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவதற்கு மேற்கு நாடுகள் தயாராக இல்லை.
*    சீனாவுக்கு குழாய்கள் மூலமாக எரிவாயு அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

மாஸ்கோ, மார்ச் 22- ரஷ்யா-உக்ரைன் நெருக்கடிக்கு சீனாவின் முன்மொழிவு அமைதியை உருவாக்குவதற்கான அடிப்படையாக இருக்க முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, புடின் நேரில் சந்தித்துப் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், “உக்ரைன் விவகாரத்தில் கட்டுப்படுத்த முடியாத கட்டத்திற்குள் அதைத் தள்ளும் எந்த நடவடிக்கையையும் எடுத்துவிடக்கூடாது. அணுஆயுதப் போர் என்று வந்துவிட்டால் அதில் யாருக்கும் வெற்றி கிடைக்காது” என்று கூறியுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய புடின், “தற்போது சீனா முன்வைத்துள்ள இந்த அமைதித்திட்டம் தீர்வுக்கான அடிப் படையாக இருக்க முடியும். ஆனால் மேற்கு நாடுகளும், உக்ரைனும் இதற்குத் தயாராக இருக்க மாட்டார்கள். கடைசி உக்ரைனியர் இருக்கும் வரையில் போரிட வேண்டும் என்று மேற்கு நாடுகள் தூண்டி வருகின்றன” என்று குறிப் பிட்டார். அப்போது பேசிய ஜி ஜின்பிங், “ரஷ்ய-உக்ரைன் விவகாரத்தில் சீனா நடுநிலைமை வகிக்கிறது. இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்றார்.

உக்ரைன் வரவேற்பு - அமெரிக்கா எதிர்ப்பு

சீனாவின் அமைதித்திட்டத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை சீனா கண்டிக்கவில்லை என்றும், தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது ரஷ்யாவுக்கு சாதகமாகவே முடியும் என்றும் கூறியுள்ளது. அதோடு, மீண்டும் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள ரஷ்யாவுக்கு கால அவகாசம் கொடுப்பதாக அமைந்து விடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த முயற்சிக்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்திருக்கிறது. இந்தப்  பிரச்சனையில் சீனா தங்களை ஈடுபடுத்திக் கொள்வது வரவேற்கத்தக்க அம்சம் என்று கூறியுள்ள உக்ரைன், ரஷ்யா தனது படைகளை உக்ரைன் பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

வரம்பற்ற உறவு

உக்ரைன் நெருக்கடி தொடங்கு வதற்கு முன்பாக நடந்த சந்திப்பின் போது, வரம்பற்ற உறவை இரு  நாடுகளுக்கும் இடையில் உறுதிப்படு த்துவது என்று ஜி ஜின்பிங்கும், விளா டிமீர் புடினும் அறிவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப் படுத்துவதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக புடின் சுட்டிக்காட்டி யுள்ளார். இந்தப் பன்முகத்தன்மை கொண்ட ஒத்துழைப்பு தொடரும். இரு  நாடுகளின் மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று புடின் கூறியுள்ளார். கடுமையான எதிர்மறை அணுகு முறையை மேற்கு நாடுகளிடம் இருந்து சந்தித்து வரும் ரஷ்யாவுக்கும், அந்நாட்டின் ஜனாதிபதி புடினுக்கும் சீன ஜனாதிபதியின் பயணம் பெரும் அளவில் உதவியுள்ளது. இந்தப் பய ணத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க, ஜப்பானின் அமைச்சர் ஒருவர் உக்ரைனுக்கு சென்றது பெரிய அளவில் எடுபடவில்லை. சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் கூட்டுப் பயிற்சிகளும் ரஷ்யா மீதான அமெரிக்கத் தடைகளால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதையே காட்டியது. குழாய்கள் வழியாக எரிவாயுவை சீனாவுக்கு அனுப்பும் திட்டம் இன்னும் முழுமையடையாததால் கூட்ட றிக்கையில் இடம் பெறவில்லை. இது குறித்த உடன்பாட்டில் மங்கோலியாவும் கையெழுத்திட்டிருந்தது. அந்நாட்டிற்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவு செய்து விட்டார்கள் என்று ரஷ்யா கூறியுள்ளது. 2030 ஆம் ஆண்டில் சீனாவுக்கான ரஷ்யாவின் எரி வாயு ஏற்றுமதி பல மடங்கு அதி கரித்திருக்கும் என்று ரஷ்யா தெரி வித்துள்ளது.

புதிய தொடக்கம்

சர்வதேச ரீதியில் எத்தகைய மாற்றங்கள் வந்தாலும், ரஷ்யாவுடனான உறவுக்கு சீனா எப்போதும் முக்கி யத்துவம் அளிக்கும் என்று தெரிவித்த ஜி ஜின்பிங், “என்னுடைய இந்தப் பய ணம் நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கானதாகும். கடந்த கால  சாதனைகளில் இருந்து இரு நாடு களும் அடுத்த கட்டங்களைக் கட்டி யமைப்போம். ஐ.நா.பாதுகாப்பு கவுன் சிலின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இயற்கையாகவே எங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

சீனாவுக்கு ஆதரவு

தைவான், ஹாங்காங் மற்றும் ஜின்ஜியாங் ஆகிய பகுதிகளில் சீனா வுக்கு நியாயமான உரிமைகளுக்கு ரஷ்யா உறுதியான ஆதரவைத் தரு கிறது என்று குறிப்பிட்ட புடின், “சீனாவின் முயற்சியால் சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் நல்ல உறவு ஏற்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். விவசாயம், வனத்துறை, அடிப் படையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள், சந்தையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஊடகங்கள் ஆகிய துறைகளில் இரு தரப்பு உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன. 


 


 

;