சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ளது வழக்கமான சுவாசத் தொற்று நோய் கள் தான் எனவும் புதிய வைரஸ் தொற்று எது வும் பரவவில்லை என சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. குளிர் காலம் துவங்கியுள்ளதால் இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோபிளாஸ்மா, நிமோனியா மற்றும் சுவாசத் தொற்றுகள் பரவியுள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது. இதனால் இருமல், தொண்டைப் புண் மற்றும் தலைவலி உள்ளிட்ட சுவாசத் தொற்று அறிகுறிகள் ஏற்படுகின்றன.