world

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகம்

கொழும்பு, ஜுலை 10 - இலங்கையில் மக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த, கோத்தபய அரசு கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து எரிபொருள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டது. இதையடுத்து லங்கா ஐ.ஓ.சி விநியோகத்தை நிறுத்தியது. இந்நிலையில், மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து மீண்டும் எரிபொருள் விநியோகத்தை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்தொடங்கியுள்ளது. திரிகோணமலையில் இருந்து எரிபொருள் நிலையங்களுக்கான விநியோகம் தொடங்கப் பட்டுள்ளது. மேலும் திரிகோணமலையில் உள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சொந்தமான முனையம் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.