புதுதில்லி, செப். 26 - வாஷிங்டனில் உள்ள கியூப தூதரகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: 2023 செப்டம்பர் 24 அன்றி ரவு அமெரிக்காவில் கியூப தூதரக வளாகத்தின் மீது பயங்கரவாதிகளின் தாக்கு தல் நடைபெற்றிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அங்கிருந்த ஊழியர்கள் எவருக்கும் காயங்கள் எது வும் இல்லை என்ற போதி லும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இது, 2020 ஏப்ரலுக்குப் பின்னர் கியூப தூதரகத்தின் மீது ஏவப்பட்டுள்ள இரண் டாவது தாக்குதலாகும். 2020-ஆம் ஆண்டின் தாக்குதல் நடைபெற்று மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும், அமெரிக்க அரசு நிர்வாகம் சோசலிச கியூபா விற்கு எதிராகப் பகைமைப் போக்கைக் கடைப்பிடித்து வருவதன் காரணமாக, தாக்குதலில் ஈடுபட்ட கய வர்களை இன்னமும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தாமல் உள்ளது. எனவே, அமெரிக்க நிர் வாகம், தூதரக உறவுகள் தொடர்பாக வியன்னா கன் வென்ஷன் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைக் கறாராக அமல்படுத்த முன்வர வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. மேலும், குற்றம்புரிந்த கயவர்களுக்கு எதிராக உட னடியாகவும் கடுமையாக வும் நடவடிக்கை எடுக்கப் படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. (ந.நி.)