பிரசல்ஸ்,டிச.15- ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர உள்ள சிக்கன நடவடிக்கைக்கு ஐரோப்பிய தொழிற்சங்க கூட்டமைப்பு (ETUC) தலை மையில் 30 நாடுகளைச் சேர்ந்த தொழி ற்சங்க தலைவர்கள்,அரசியல் கட்சிகள் மற்றும் பிற தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் பங்கெடுக்கும் உச்சிமாநாடு நடை பெறுகிறது.இந்த மாநாட்டில் ‘ஸ்திரத் தன்மை மற்றும் வளர்ச்சி ஒப்பந்தம்’ என்ற பெயரில் தொழிலாளர்களின் நலனை காவுகொடுக்கும் சர்ச்சைக்குரிய ஒப் பந்தம் கொண்டுவரப்பட உள்ளது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
சுமார் 15,000 பேர் பங்கேற்புடன் நடை பெற்ற இந்த போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்று இந்த சிக்கன நடவடிக்கையை கொண்டுவரக் கூடாது என ஐரோப்பிய ஒன்றிய தலை வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரவி ருக்கும் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றி யத்தின் 14 உறுப்பு நாடுகளின் வரவு செலவுத் திட்டங்களில் இருந்து தொழிலா ளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் வகையில் 4,900 கோடி டாலர் கள் மதிப்பிலான வெட்டுக்களுக்கு வழி வகுக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளன.இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலும் வறுமையை அதிகரிக்கும் என ஐரோப் பிய தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உக்ரைன் போர், இஸ்ரேல் போர் உள்ளிட்டவற்றால் ஐரோப்பா முழுவதிலும் எரிசக்தி நெருக்கடி, வாழ்க்கைச் செலவு நெருக்கடி,மருத்துவ நெருக்கடிகள் தீவிர மடைந்துள்ளன. இந்நிலையில், ஐரோப் பிய தொழிற்சங்கங்கள், அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர் கொண்டு மக்கள் வாழும் வகையில் ஊதிய உயர்வு கோரி பல போராட்டங்களை நடத்தி வருகின் றன. இந்நிலையில் தற்போது மேற்கொள் ளும் சிக்கன நடவடிக்கைகள் தொழிலா ளர்களை மேலும் வறுமைக்குள் தள்ளும்.
இந்த சிக்கன நடவடிக்கை பள்ளி கள், மருத்துவமனைகள், சமூக வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கும் தொழிலாளர்க ளின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் ஓய்வூதியங்கள் அல்லது ஊதியம் ஆகியவற்றிலும் வெட்டுக்களை ஏற்படுத்துகிறது என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.