world

img

கொரோனா பரவல் : கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

ஜெனிவா 
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மீண்டும் உச்சபட்ச நிலையில் பரவி வருகிறது. அங்கு தினசரி பாதிப்புகள் 80 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இது ஒரு பக்கம் எனறால் கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் வேறு மிரட்டி வருகிறது. இது முந்தைய திரிபுகளை விட 5 மடங்கு வேகமாக பரவி வரும் நிலையில், உலக நாடுகள் சற்று கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

இந்நிலையில்,கொரோனா பரவலை சற்று கட்டுக்குள் கொண்டு வர கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக  சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனர் டெட்ராஸ் அதானோம் கூறியதாவது,"கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுங்கள். வாழ்க்கையை ரத்து செய்வதை விட நிகழ்வை ரத்து செய்வது சிறந்தது.இப்போது கொண்டாடிவிட்டு விட பின்னர் துக்கப்படுவதை விட ரத்து செய்து பின்னர் கொண்டாடுவது நல்லது" என அறிவுறுத்தியுள்ளார். 

;