world

img

எகிப்திய உயர் அதிகாரி டாஷேப்செஸ்-ஸின் 4400 ஆண்டு பழமையான மம்மி கண்டுபிடிப்பு - பேராசிரியர் சோ. மோகனா

எகிப்தின் பழமையான கல்லறை மம்மி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மம்மி 4,400 ஆண்டுகள் பழமை யானதாகும். மேலும், இந்த மம்மி,  கிமு 24 மற்றும் 25-ஆம் நூற்றாண்டு களில் வாழ்ந்த பண்டைய எகிப்திய உயர் அதிகாரியான டாஷேப்செஸ் (Ptahshepses)-இன் மம்மி ஆகும். பிராக் (Prague) நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் தத்து வம் மற்றும் கலை பீடத்தின், எகிப்தைப் பற்றி படிக்கும் செக் இன்ஸ்டி டியூட், இந்த கண்டுபிடிப்பு பற்றி தனது முகநூலில் அறிக்கை வெளி யிட்டுள்ளது. கெய்ரோவுக்கு அருகில் அபுசிர் மற்றும் சக்காராவின் (Abusir and Saqqara) பிரமிடு வயல்களுக்கு இடை யில் உள்ள மண்டலத்தில் எகிப்து உயர் அதிகாரியான டாஷேப்செஸ்-சின் கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே டாஷேப்செஸ் கல்லறை கண்டுபிடிப்பு 

சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பே  பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சி யாளர் அகஸ்டே மரியட்டால், இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு, அந்த தகவலும் வெளியிடப்பட்டது. ஆனால் அவர் ஒரு பெரிய கதவு போன்ற  இடத்தில் (False door) மற்றும் வழி பாட்டு தேவாலயத்தின் நுழை வாயிலுக்கு மேலே வைக்கப்பட்டிருந்த ஒரு லிண்டலைக் (Lintel) கண்டு பிடித்தார். அப்போது மேற்கு பாலை வனப்பகுதியில் வீசிய மணல் புயல் விரைவிலேயே கல்லறையை மூடியது. 

வரலாற்றுப் போக்கை மாற்றியவரின் கல்லறை 

அதன்பிறகு, அபுசிரின் ஆராய்ச்சித் தலைவரான மிரோஸ்லாவ் பார்டா தலைமையில் மீண்டும் டாஷேப்செஸ்-சின் கல்லறை தேடப்பட்டு வந்தது. இதில்தான், “பல வருடங்கள் நீடித்த  கடினமான தேடலுக்குப் பிறகு, விரி வான செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பழைய வரைபடங்களின் ஆய்வு மூலம், எகிப்திய வரலாற்றின் போக் கையே மாற்றிய மனிதனான டாஷேப்செஸின் (Ptahshepses) கல்லறை 2022-இல் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது” என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பாலைவனப் பயணத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகளில் மிகப் பெரிய ஒன்றாகும். இதுதொடர்பாக ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டி ருக்கிறது. அதில், டாஷேப்செஸின் குடும்பம் மற்றும் அந்த காலங்களின் நிலைகள் கண்டுபிடிக்கப்படலாம். யார் இந்த டாஷேப்செஸ்?

யார் இந்த டாஷேப்செஸ்?

பண்டைய எகிப்தின் இராச்சிய காலத்தில், நியுசெர்ரே -(Nyuserre) என்ற பாரோ (ராஜா)-வின் (ஐந்தாவது வம்சத்தின் ஆறாவது ஆட்சியாளர்) கீழ் உயர் அதிகாரியாகப் பணி யாற்றியவர்தான் டாஷேப்செஸ்.  அந்த வகையில், அரசியல், வரலாறு மற்றும் மத அடிப்படையில், டாஷேப்செஸ்-இன் இந்த கல்லறை எகிப்திய தொல்பொருளியலில் சமீபத்திய காலங்களில் மிகவும் குறிப் பிடத்தக்க முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று என செக் பணி அறிக்கை உறுதிப்படுத்துகிறது. டாஷேப்செஸ் புதைக்கப்பட்ட மஸ்தபா அளவு 42x22 மீட்டர். இது 4 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டது. புதைகுழி பல நூற்றாண்டு களுக்கு முன்பு அல்லது ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், இப்போது இதில் மட்பாண்டங்கள், சில  பொருட்களின் எச்சங்கள், கேனோபிக் ஜாடிகள் மற்றும் உலகின் முதல் மம்மியாக்கப்பட்ட மீன் போன்றவை உள்ளன..  பகுதியளவு திறக்கப்பட்ட/கல் சவப்பெட்டியில் இன்னும் டாஷேப்செஸின் முழு மம்மி உள்ளது.  மம்மியின் பகுப்பாய்வு டாஷேப்செஸ் நீண்ட காலம் வாழ்ந்த தை உறுதிப்படுத்துகிறது. இது கதவு போன்ற இடத்தில் உள்ள கல்வெட்டு களால் சுட்டிக்காட்டப்படுகிறது. நான்கா வது மற்றும் ஐந்தாவது வம்சத்தின் பிற்பகுதியில் மென்கௌரா, ஷெப்செஸ்காப், யூசர்காப், சாஹுரா,  நெபெரிர்காரா மற்றும் நியுசெரா  (Menkaura, Shepseskaf, Userkaf, Sahura, Neferirkara and Nyuserra.) ஆகிய 6 மன்னர்களின் ஆட்சியின் போது அவர் வாழ்ந்ததாக அந்த வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது. மானுடவியலாளர்களின் கூற்றுப்படி, அவர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது வரை வாழ்ந்து இருக்கிறார் என்றும் தெரியவருகிறது.  கருத்து உதவி: Cosmos, Latest science news for 3 October 2023