world

img

உக்ரைன் போர்: இந்தியர்களின் பயண செலவை ஒன்றிய அரசே ஏற்கும் 

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்புவோரின் விமான பயண செலவை ஒன்றிய அரசே ஏற்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் தொடர்ச்சியாக எல்லைப்பகுதியில் உக்ரைன் நேட்டோ படைகளை குவிக்கத் தொடங்கியது.  தொடர்ந்து உக்ரைனின் நெருக்கடியால் நேற்று ரஷ்யா உக்ரைன் மீது நேற்று போர் தொடுக்கத் தொடங்கியது. இதை சற்றும் எதிர்பாராத நேட்டோ உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் இல்லை என்று அறிவித்துள்ளது. இதனால் ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது.  உதவி கேட்டும் உக்ரைனுடன் போரிட உலக நாடுகள் முன்வரவில்லை. உக்ரைன் தனித்து போரிடுகிறது என உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் உக்ரைனில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற பிற நாட்டினரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசு   சார்பிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், பணியாளர்களும் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.  இதைத்தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள சுமார் 5000 தமிழக மாணவர்களை மீட்டு வர தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து தமிழகம் வரும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
இந்நிலையில் தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் விமான பயண செலை ஒன்றிய அரசே ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 

;