world

img

காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர ஐ.நா. தீர்மானம்!

காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி ஐ.நா.வின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

காசாவில் இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு மனிதபிமான அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் அமல்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது ஐக்கிய நாடுகள் பொது சபை.

காசாவிலுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு 120 உறுப்பு நாடுகள் ஆதரவாளித்தும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தது.

இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இந்தியா இந்த தீர்மானத்தை புறகணித்தற்கு பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.