world

img

ஸ்பெயின் : பிரதமரையும் பதம் பார்த்த பெகாசஸ்

ஸ்பெயினின் பிரதமர் உள்ளிட்ட 200 முக்கியமான நபர்களின் அலைபேசிகளை பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பார்த்தது அம்பலமாகியுள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் வழியாக உலகின் பல்வேறு அரசுகள் தங்கள் அரசியல் எதிரிகளை உளவு பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்தப் பிரச்சனை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெகாசஸ் நிறுவனம் தனியார்களுக்கு தங்கள் மென்பொருளைத் தருவதில்லை என்ற வாதம், அது பயன்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள அரசுகளுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது. கொரோனா பெருந்தொற்றால் பெகாசஸ் மென்பொருள் உளவு மோசடி பின்னுக்குச் சென்றது.

ஸ்பெயினில் இந்தப் பிரச்சனை மீண்டும் வெளியாகியிருக்கிறது. நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் ராணுவ அமைச்சர் மார்கரீட்டா ரோபிள்ஸ் ஆகிய இருவரின் அலைபேசிகளும் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இவர்களோடு மேலும் பல முக்கியமான நபர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். பிரதமர் சான்செசின் அலைபேசியில் இருந்து 2.6 ஜிகாபைட் அளவுக்கு தகவல்கள் திருடப்பட்டன. 9 ஜிகாபைட் அளவிலான தகவல்கள் ராணுவ அமைச்சரின் அலைபேசியில் இருந்து களவாடப்பட்டிருக்கின்றன.

;