world

img

ஒமைக்ரானை தொடர்ந்து புதிய வகை ஃப்ளோரோனா தொற்று

ஒமைக்ரானைத்தொடர்ந்து புதிய வகை ஃப்ளோரோனா தொற்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. 
இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்த 'ஃப்ளோரொனா' என்னும் நோய் இஸ்ரேலில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவனை ஒன்றில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏற்கனவே இஸ்ரேலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 3வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள். 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் செலுத்தியுள்ளனர். இருந்தும் அங்கு இதுபோன்ற தொற்றுகள் ஏற்படுவது மருத்துவ உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.