world

img

இஸ்ரேல் - காசா போர் நிறுத்த முயற்சியை கைவிடப் போவதில்லை!

தோகா, டிச.10- இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடை யிலான போரை உட னடியாக மனிதாபி மான அடிப்படையில் நிறுத்த வேண்டுமென ஐநா பொதுச் செய லாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஐநா சாசன பிரிவு 99-ஐ பயன்  படுத்தி சிறப்பு அதிகாரம் மூலம் முன் மொழிந்த தீர்மானத்தை அமெரிக்க ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. இந்நிலையில் “ஒரு மனிதாபிமான பேர ழிவைத் தடுக்க பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தினேன், மேலும் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் அறி விக்கப்பட வேண்டும் என்ற எனது வேண்டு கோளையும் வலியுறுத்தினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பாதுகாப்பு கவுன்சில் அதைச் செய்யத் தவறிவிட்டது”, என்று அன்டோனியா குட்டரெஸ் வேதனையை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் போர்நிறுத்ததிற்காக முறையீடு செய்வதை நான் கைவிட மாட்  டேன் என்றும் கத்தார் தலைநகர் தோகா வில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் செய்தி யாளர் சந்திப்பில் ஐ.நா. பொதுச்செயலா ளர் குட்டரெஸ் சூளுரைத்துள்ளார்.