world

img

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பணக்காரர்களுக்கு வரி :  இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்....

கொழும்பு
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 13 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய வீதிகளில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், இலங்கை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, 4 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டது. அதில் நிதியமைச்சர் ராஜினாமா செய்துவிட்டார்.

இந்நிலையில் இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கையில் பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதவை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. சட்டத்தின் படி 2020-21 நிதியாண்டில் 2 பில்லியன் இலங்கை ரூபாய்க்கு மேல் சம்பாதித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது 25% முன்னறிவிப்பு வரி விதிக்கப்படும். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட இந்த வரி மூலம் 100 பில்லியன் இலங்கை ரூபாய் வருமானத்தை ஈட்டலாம் இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. 

;