tamilnadu

img

இனி 9 மணி நேரம் வேலை பார்த்தாக வேண்டுமாம்!

புதுதில்லி:
இந்தியாவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 9 மணிநேரமாக அதிகரிக்க மத்திய பாஜக அரசுதிட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அரசு,தங்களின் இந்த திட்டம் குறித்து, டிசம்பர்1-ஆம் தேதிக்குள் தொழிலாளர்களும் பொதுமக்களும் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.இந்தியாவில் தொழிலாளர்களுக் கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. அதற்கான போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்நிலையில் ‘தொழிலாளர் களுக்கான ஊதிய விதிமுறைகள் குறித்தவரைவு’ என்ற பெயரில், மத்திய தொழிலாளர்துறை சார்பில் அறிக்கை ஒன்றை பொதுமக்களின் பார்வைக்காக மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையில்தான், வேலைநேரத்தை 9 மணிநேரமாக அதிகரிக்கும்திட்டத்தை முன்வைத்துள்ளது. அறிக்கையின் தலைப்போ, ஊதிய விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கை. ஆனால்,அதுதொடர்பாக குறிப்பான உத்தரவாதம் எதையும் அளிக்காமல், வேலைநேரத்தை அதிகரிப்போம் என்பதை மட்டும் முதன்மைப்படுத்தி மோடி அரசுதொழிலாளர்களைப் பயமுறுத்தியுள்ளது.எதிர்காலத்தில் ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு மூன்று புவியியல் வகைப் பாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும்என்று மட்டும் பரிந்துரை ஒன்றை வைத்துள்ளது. அதாவது,  40 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதி, 10 லட்சம் முதல் 40 லட்சம் வரை மக்கள்தொகை கொண்ட பெருநகரமற்ற பகுதி மற்றும் கிராமப்புறங்கள் என்று மூன்று புவியியல் பிரிவுகளாக கணக்கிட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்படுமாம்.எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கான செலவீனங்கள் குறைந்தபட்ச வருமானத்திலிருந்து 20 சதவிகிதம் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கான படிப்பு, மருத்துவச் செலவுகள் குறைந்தபட்ச வருமானத்தில் 25 சதவிகிதம் இருக்கவேண்டும் என்றெல்லாம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.எரிபொருள், மின்சாரம் மற்றும் பிறஇதர பொருட்களுக்கான செலவு, குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவிகிதத்தை கொண்டிருக்கும் என்பது ஏற்கனவே உள்ள விதியாகும். அதுவே மீண்டும் கூறப்பட்டுள்ளது. 

அதேபோல ஒரு நாளைக்கு 2,700கலோரிகள், ஒரு நிலையான குடும்பத்திற்கு ஆண்டுக்கு 66 மீட்டர் துணி ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும் என்று வரைவு விதி கூறுகிறது. இவையும் 1957-இல் முதலில் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியக் கணக்கீட் டில் இருப்பதுதான்.ஒட்டுமொத்தமாக பார்த்தால், வேலைநேர அதிகரிப்பை மட்டுமே பிரதானமாக கொண்டு, மோடி அரசு தனதுவரைவு அறிக்கையை வெளியிட்டுள் ளது.இதிலும்கூட ஓரிடத்தில் குழப்பத்தைஏற்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண வேலை நாள் என்பது 9 மணி நேரம் கொண்டதாக இருக்கும் என்று வரைவு விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மாதச் சம்பளத்திற்கான வரையறுப்பில், ஒரு மாதத்தில் 26 வேலை நாட்களில், அன்றாடம் எட்டு மணிநேரப் பணி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.