world

img

போதை மருந்து, ஆயுதக் கடத்தலை தடுக்க கூட்டு முயற்சி .... இந்தியா, இலங்கை, மாலத்தீவு பேச்சுவார்த்தையில் முடிவு

கொழும்பு:
 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு குறித்தமுத்தரப்பு பேச்சுவார்த்தை சனிக்கிழமை யன்று இலங்கையில் நடைபெற்றது.இதில் போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலைதடுப்பது போன்றவற்றில் கூட்டு முயற்சியாக ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று முன்தினம் இப்பேச்சுவார்த்தை நடந்தது. இதில், வங்கதேசம், மொரீஷியஸ் மற்றும்செசல்ஸ் நாடுகள் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டன. இந்திய அரசு சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் சார்பில் அந்நாட்டுவெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, மாலத்தீவு பாதகாப்பு துறை அமைச்சர் மரியா திதி ஆகியோர் கலந்து கொண்டனர்.இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். கடல் பாதுகாப்பு, எல்லைகள் குறித்த தெளிவு,மாசு கட்டுபடுத்துதல் பொறுப்பு, தகவல்கள் பரிமாற்றம், போதை மருந்து மற்றும் ஆயுதக்கடத்தலை தடுப்பது, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் போன்றவற்றில் கூட்டு முயற்சியாக ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. இதன்மூலம், அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பு மேம்படும் ’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

;