world

img

இலங்கைக்கு 2.9 பில்லியன் நிதி உதவி வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல்

இலங்கைக்கு 2.9 பில்லியன் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார சரிவு ஏற்பட்டு கடும் நிதி நெருக்கடிக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சூழலில், சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவிக்காக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடன் அளவு அதிகரிப்பால் ஏற்பட்ட இந்த நெருக்கடியைச் சமாளிக்க சில சீர்திருத்தங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பெயில்அவுட் நிதி வழங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது.

இந்த நிதியுதவியின் வாயிலாக இலங்கை அரசு விரைவில் வரி விதிப்பு முறைகளை மறுசீரமைப்புச் செய்ய உள்ளது. கார்பரேட் வரி விதிப்பை விரிவாக்கவும், வாட் வரி விதிப்பை விரிவாக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

;