வெனிசுலா போர்ப் பயிற்சி: இங்கிலாந்திற்கு எச்சரிக்கை
வெனிசுலாவிற்கும் கயானாவிற் கும் இடையே போர் பதற்றம் உரு வான சூழலில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு வரும் நிலையில் இங்கிலாந்து போர்க் கப்பலை அனுப்பி போர்ச் சூழலை தூண்டியது. தற்போது வெனிசுலாவின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு எதிரான அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் தற்காப்பு நடவடிக்கை யாகவும் இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் வெனிசுலா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அமெ.கூட்டணி ராணுவத்தை வெளியேற்ற இராக் முயற்சி
இராக்கில் இருந்து அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட் டணி வீரர்களை நாட்டை விட்டு வெளியேற்ற இராக் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் முகமது ஷியா அல் சுடானி தெரிவித்துள்ளார்.காசாவில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை தொடர்ந்து இராக்கில் உள்ள ராணுவத்தளங் கள் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு குழுக்கள் தொடர் தாக்குதல் நடத்துவதன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் புதிய எண்ணெய்க் கிணறுகள்
எகிப்து நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சார்ந்த ஆய்வுக்காக மொத்தம் 120 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் 29 ஒப்பந்தங்கள் 2023 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்கு பாலைவனம், சூயஸ் வளைகுடா, நைல் நதி டெல்டா மற்றும் சினாய் தீபகற்ப பகுதிகளில் 51 எண்ணெய் மற்றும் 14 எரிவாயு தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.