world

img

தீக்கதிர் உலக செய்திகள்

எரிவாயுவிற்கு ரஷ்யாவை நாடும் நேட்டோ நாடுகள் 

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனை தூண்டிவிடும் நேட்டோ நாடுகளான பெல்ஜியமும், ஸ்பெயினும் எரிபொ ருளுக்கு ரஷ்யாவையே சார்ந்துள்ளன. உலகளவில் ரஷ்யா விடம் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 2 மற்றும் 3 ஆம் இடத்தில் இவை உள்ளன. போர் துவங்கிய பிறகு இறக்குமதி 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

டாலருக்கு எதிராக பாக். நாணயம் வீழ்ச்சி  

அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தானின் நாண யம் 304.45 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது என  ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.அமெரிக்க டாலரின் மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று இதுவரை இல்லாத அளவிற்கு  303.05 ரூபாயாக இருந்தது. வாரத்தின் மூன்றாவது நாளில் ரூபாய் மதிப்பு 1.4 ரூபாய் ( 0.46 சதவீதம்) குறைந்துள்ள தாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

7 நிமிட புற்றுநோய் ஊசி

உலகில் முதல் முதலாக 7 நிமிடத்தில் செலுத்தும் புற்று நோய் ஊசி இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. தற்போது நரம்பு வழி செலுத்தப்படும் ஊசிக்கு 30 முதல் 60 நிமிடங்கள் ஆகிறது என்பது குறிப்பித்தக்கது. 

மேலும் வலுப்படும் வடகொரியா- ரஷ்யா உறவு 

வட கொரியாவுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ரஷ்யா கூறியுள்ளது. இரு நாடுக ளுக்கும்  இடையிலான பேச்சுவார்த்தைகள் அதிகரித்து, நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதாக உறுதியளித்து புடினும் கிம்மும் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பைடனுக்கு மூளை கலங்கிவிட்டது’

“அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மூளை கலங்கிவிட்டது; நேர்மையற்றவரான ஜோ பைடன் முட்டாள் மட்டுமல்ல, திறமை இல்லாதவரும் கூட அவரது செயல்பாடுகள்  மூன்றாம் உலகப் போரை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும்” என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.