world

img

இந்தியா: ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,623ஆக உயர்வு  

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,623ஆக உயர்ந்துள்ளது.  

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தி வருகின்றன.

அதனடிப்படையில் ஒமிக்ரான் தொற்றால் மிகவும் பாதிப்புக்குள்ளான மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்கள் ஆகும். இந்த நிலையில் இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,623ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 1,409 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

மராட்டியம்-1,009, டெல்லி-513, கர்நாடகா-441, தமிழ்நாட்டில் 185 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

;