world

தொடர்கிறது சரிவு

பிரஸ்ஸல்ஸ், மே 18- ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வளர்ச்சி குறையும் என்றும், பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் புதிய கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தக் கணிப்பை ஐரோப்பிய யூனியனின் ஆணையமே அறிவித்திருக் கிறது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய பொருளாதாரத்திற்கான ஆணையர் பாவ்லோ ஜென்டிலோனி, “பண்டங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதனால் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் வெட்டு விழுந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.  இந்த கணிப்பு மாற்றத்திற்கு உக்ரைன் நெருக்கடி காரணமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டில் 2.7 விழுக்காடு அளவிலும், 2023 ஆம் ஆண்டில் 2.3 விழுக்காடு அளவிலும் பொருளா தார வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

;