world

தென் கிழக்கு ஆசியப் பொருளாதாரம் வழிகாட்டுகிறது வியட்நாம்

ஹனோய், மார்ச் 15- தென் கிழக்கு ஆசியப் பகுதியி லேயே அதிக வேகத்துடன் வளரும் பொ ருளாதாரமாக வியட்நாம் இருக்கிறது என்று பொருளியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். பெருந்தொற்றால் பெரும்பாலான நாடுகள் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளன. 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் பெரும் சரிவை சந்தித்தன. இது குறித்த ஆய்வை மேற்கொண்ட சர்வதேச ஆய்வு நிறுவனமான போகஸ் எகா னாமிக்ஸ் வியட்நாமின் பொருளாதா ரம் நல்ல வளர்ச்சியை எட்டும் என்று  கணித்துள்ளது. குறிப்பாக, உற்பத்தித் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற் றத்தை அந்த நிறுவனத்தின் ஆய்வா ளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் குறித்து இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, வியட்நாமின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் 7.2 விழுக்காடும், 2023 ஆம் ஆண்டில் 7 விழுக்காடும் உயரும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

“2021 ஆம் ஆண்டில் பலவீனமாக இருந்தாலும், நடப்பாண்டில் நல்ல வளர்ச்சியை வியட்நாம் எட்டும். இந்தப் பகுதியிலேயே அதிக வளர்ச்சியைக் காணும் பொருளாதாரமாக வியட்நாம் இருக்கும்” என்கிறார்கள். இரண்டு முக்கியமான அம்சங்க ளை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. நுகர்வோர் வசம் பணம் இருப்பதை அரசு உத்தரவாதப் படுத்தியுள்ளது. அவர்களின் வாங்கும் சக்தி நல்ல நிலையில் இருக்கிறது. இரண்டாவதாக, முதலீட்டைக் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டில் வியட்நாம் அரசு சிறப்புக் கவனம் செலுத்தியிருக்கிறது.

இந்த இரண்டு அம்சங்களும் மற்ற நாடுகளுக்கும் வழிகாட்டுகிறது என்று அந்த நிறு வனத்தின் ஆய்வறிக்கை தெரி விக்கிறது. பொருளாதாரத்தை முடுக்கி விடும் வகையில் வெளியிடப்பட்ட அறி விப்புகளும் சாதகமான விளைவு களை ஏற்படுத்தியுள்ளன.  கட்டுமானங்களுக்கு நிதி ஒதுக்கீடு, வரிச் சுலுகைகள் மற்றும் குறைந்த  வட்டியில் கடன்கள் ஆகியவை அந்த  அறிவிப்பில் இடம் பிடித்திருக்கின்றன. ஜப்பான் முதலீட்டாளர்கள் வியட்நா மில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டு கின்றனர். இதனால் 2022 ஆம் ஆண்டில் தொழிற்சாலை உற்பத்தி 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக வளர்ச்சி இருக்கப் போகிறது. வேலையிழப்புக ளை சரி செய்து, இழந்த வேலைகளை வியட்நாம் மீட்டெடுத்துள்ளது. புதிய முதலீடுகளால் கடந்த இரண்டு மாதங்க ளில் ஆயிரக்கணக்கான புதிய வேலை கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.