world

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் வெற்றியின் விளிம்பில் தெ., ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசி லாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலை யில், 2-வது டெஸ்ட் போட்டி  கிறிஸ்ட்சர்ச் நகரில் நடை பெற்று வருகிறது.  முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 364 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னி ங்சில் 293 ரன்களில் ஆட்ட மிழந்தது. 71 ரன்கள் முன்னி லையுடன் 2-வது இன்னி ங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 354 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்து நியூசிலாந்து அணி யின் வெற்றி இலக்காக 426  ரன்கள் நிர்ணயித்தது. கடின மான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4  விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. இன் னும் ஒருநாள் பாக்கி உள்ள  நிலையில், நியூசிலாந்து அணிக்கு 332 ரன்கள் வெற்றி க்கு இன்னும் 90 ஓவர்கள் மற்றும் 6 விக்கெட்டுகள் மீதம் உள்ளன. எனினும் நியூ சிலாந்து அணி மிடில் ஆர்டர் வீரர்களை இழந்துள்ளதால் தென் ஆப்பிரிக்கா வெற்றி  பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதாவது ஏறக்குறைய வெற்றியின் விளிம்பில் உள்ளது.