world

img

பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

வாஷிங்டன், ஜன.16- கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலை யில், அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பாதுகாப்பான பணிச்சூழல் கோரிப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஒன்றுபட்ட தேசிய செவிலி யர்கள் என்ற அமைப்பின் கீழ் ஒருங் கிணைக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் செவிலியர்கள் போராட் டக் களத்தில் உள்ளனர். உலகி லேயே அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகள்தான் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள பெரும் தொற்றை சமாளிக்க முடி யாமல் மருத்துவமனைகள் திணறு கின்றன. அரசும், மருத்துவமனை நிர்வாகங்களும் காட்டும் அலட்சி யத்தை செவிலியர்கள் கடுமை யாகக் கண்டித்துள்ளனர். போதிய அளவு ஊழியர்கள் இல்லாததால் பல மருத்துவமனை களில் நாள் முழுக்க பணியாற்ற வேண்டிய மோசமான நிலை உள்ளது. பொது சுகாதாரத்தில் அக் கறை காட்டாமல் தங்கள் வணி கத்தில் கவனம் செலுத்துகிறார்கள் என்று மருத்துவமனைகளின் நிர் வாகங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மற்றும் 11 மாகாணங்களில் ஆர்ப்பாட்டங் கள் நடந்துள்ளன.

அதில் பேசிய வர்கள், பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதி பதி ஜோ பைடனை வலியுறுத்தி யுள்ளனர். தொற்றினால் ஏராளமான செவிலியர்கள் உயிரிழந்திருக்கி றார்கள். அவர்களை நினைவு  கூரும் வகையில், போராட்டத்தின் போது மெழுகுவர்த்தி ஏந்தி அஞ் சலி செலுத்தியிருக்கிறார்கள். மருத்துவப் பணியாளர்களுக்குத் அவசியத் தேவையான பணிப் பாதுகாப்பை நீக்கும் வகையில் ஜோ பைடன் நிர்வாகம் நடந்து கொள்கிறது என்று செவிலியர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது. அதோடு, செவிலியர்கள் பற்றாக் குறையால் தொற்றுக்கு எதிரான போர் நெருக்கடியைச் சந்தித்து  வருகிறது என்று ஒன்றுபட்ட தேசிய செவிலியர் சங்கத்தின் தலைவர் கார்டெஸ் எச்சரித்துள்ளார். மருத்துவ சாதனங்களை சரி செய்து கொடுப்பதற்கான ஏற்பாடு கள் இல்லை என்பதால் நோயா ளிகளுக்கு சிகிச்சை தர முடிய வில்லை என்றும், சிகிச்சைக்கு உதவ மருத்துவமனை நிர்வாகங் கள் தயங்குகின்றன என்று சிகாகோ நகர செவிலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேசிய செவி லியர் சங்கத்துடன் இணைந்து சிகாகோ நகர செவிலியர்களும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கத் துவங்கியிருக்கிறார்கள்.

;