world

img

விலைவாசிக்கு முன்னுரிமை

வெல்லிங்டன், ஜன.30- நுகர்வோர் விலைப்பட்டியலில் தொடர்ந்து விலைகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்து வதே தனது முன்னுரிமையாக இருக்கும் என்று நியூசிலாந்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்று ள்ள கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறி வித்தார். அதைத்தொடர்ந்து ஹிப்கின்ஸ் பிரதமராக வும், கார்மெல் செபுலோனி துணைப் பிரதமராகவும்  பொறுப்பேற்றுக் கொண்டனர். அடுத்த வாரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்க இருக்கிறது.  தேசியப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை களை தன் வசமே ஹிப்கின்ஸ் வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2022ல் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 7.2 விழுக்காடாக இருந்தது. பல்வேறு அத்தியா வசியப் பொருட்களின் விலையுயர்வும் இதற்குக்  காரணமாக அமைந்தது. இதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்படும் என்றும், மக்கள் எந்தவித நெருக்கடியையும் சந்திக்காத வகையில் அரசு செயல்படும் என்றும் புதிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உறுதியளித்துள்ளார். தனது பதவி விலகல் பற்றிக் கருத்து தெரிவித்த ஜெசிந்தா ஆர்டெர்ன், ‘‘எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக பிரதமர் பொறுப்பு கிடைத்ததைக் கருதுகிறேன். ஐந்தரை  ஆண்டுகாலம் அதில் இருந்த நான், சரியான தருணத்தில் விலகியுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.  நடப்பாண்டின் அக்டோபர் 24 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திற்கான புதிய தேர்தல் நடைபெறவுள்ளது.

;