world

img

வேலையின்மைக் கொடுமை - சுரங்கம் தோண்டச் சென்று உயிரிழக்கும் ஆப்கன் இளைஞர்கள்

காபூல்,மார்ச் 13- வேலையின்மை, வறுமை ஆகியவற்றால் வாழ்க்கைச் சூழல் மோச மடைந்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானியர்கள் சுரங்கம் தோண்டச் சென்று உயிரை இழக்கும் கொடுமை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானின்  வேலையின்மையை பயன்படுத்தி இளைஞர்க ளை குறைந்த சம்பளத்திற்கு அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஆபத்தான மலைப்பகுதியில் உள்ள தங்கச் சுரங்கங்களில்  பணி புரிய அழைத்துச் செல்லப் படுகிறார்கள். அதற்காக அதிக கடன்களை பெற்று செல்லும் இளைஞர்கள் போதிய வருமானம் கிடைக் காமல் மேலும் கடன்காரர்க ளாக மாறுகிறார்கள். ஆப்கனில் இருந்த அமெ ரிக்கப் படை அந்நாட்டை சூறையாடி  தலிபான்களிடம்  ஒப்படைத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தற்போதும்  அந் நாட்டின் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் மிக மோசமான வறுமையில் உள்ளனர் என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள் ளன.  இந்நிலையில் வேலை யின்மையால் இளைஞர்கள் உயிரைப் பணயம் வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனினும் அதில் அவர்கள் மரணிக்கிறார்களே தவிர அவர்களது வாழ்க்கைச் சூழல் மேம்படும் வகையில் நன்மை ஏதும் நடப்ப தில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.